மத்தியப்பிரதேசத்தில் மின்னல் தாக்கி 4 பேர் பலி, 2 பேர் காயம்
மத்தியப்பிரதேசத்தில் நீமுச் மாவட்டத்தில் இரண்டு இடங்களில் மின்னல் தாக்கி 4 பேர் பலியாகி உள்ளனர். மேலும், இருவர் காயமடைந்து உள்ளனர்.
போபால்
மத்தியப் பிரதேசத்தின் நீமுச் மாவட்டத்தில் ஜிரான் மற்றும் லோட் கிராமங்களில் மின்னல் தாக்கியதில் 4 பேர் பலியாகினர். மேலும், 2 பேர் காயமடைந்தனர்.
இது குறித்து துணைப் பிரிவு மாஜிஸ்திரேட் எஸ்.எல். ஷாக்யா கூறுகையில்,
ஜிரான் கிராமத்தில், மின்னல் தாக்கியதில் ராஜஸ்தானைச் சேர்ந்த ஒருவர் உட்பட இரண்டு பேர் பலியாகினர். அதே நேரத்தில் லோட் கிராமத்தில் மின்னல் தாக்கியதில் 2 பேர் இறந்தனர் மேலும் 2 பேர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவர்களுக்கு இலவச சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இறந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா நான்கு லட்சம் ரூபாய் வழங்குவதற்கான நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகம் தொடங்கி இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
Related Tags :
Next Story