கிருஷ்ண ஜெயந்தி விழா; குருவாயூர் கிருஷ்ணன் கோவிலில் நீண்ட வரிசையில் பக்தர்கள் சாமி தரிசனம்


கிருஷ்ண ஜெயந்தி விழா; குருவாயூர் கிருஷ்ணன் கோவிலில் நீண்ட வரிசையில் பக்தர்கள் சாமி தரிசனம்
x
தினத்தந்தி 30 Aug 2021 7:31 AM (Updated: 30 Aug 2021 7:31 AM)
t-max-icont-min-icon

கிருஷ்ண ஜெயந்தி விழாவையொட்டி குருவாயூர் கிருஷ்ணன் கோவிலில் நீண்ட வரிசையில் நின்று பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

திருவனந்தபுரம்,

கிருஷ்ணர் அவதரித்த அற்புத நாள் கிருஷ்ண ஜெயந்தி தினமாக கொண்டாடப்படுகிறது. இந்துக்களின் முக்கிய பண்டிகைகளுள் ஒன்றான இந்த புனித நாளில் விரதம் இருந்து கிருஷ்ணருக்கு அபிஷேகம், அலங்காரம், நெய்வேத்தியம் படைத்து, பாடல்களை பாடி அவரின் அருளை பெறுவர். 

அதன்படி நாடு முழுவதும் இன்று கிருஷ்ண ஜெயந்தி விழா கோலாகலமாக கொண்டாப்பட்டு வரும் நிலையில் வட மாநிலங்களில் கோவில்களில் அதிகாலை முதலே சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், கிருஷ்ண ஜெயந்தி விழாவையொட்டி கேரளா மாநிலம் திருச்சூர் மாவட்டத்தில் உள்ள மிகவும் பிரசிதிப்பெற்ற குருவாயூர் கிருஷ்ணன் கோவிலில் இன்று காலை முதலே சிறப்பு பூஜை மற்றும் வழிபாடு நடந்தது.

இதில் எராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். மேலும் பக்தர்கள் முக கவசம் மற்றும் சமூக இடைவெளி உள்ளிட்ட வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடித்து நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.

Next Story