புதுச்சேரி சட்டசபைக்கான துணை சபாநாயகராக எம்.எல்.ஏ. ராஜவேலு பொறுப்பேற்பு


புதுச்சேரி சட்டசபைக்கான துணை சபாநாயகராக எம்.எல்.ஏ. ராஜவேலு பொறுப்பேற்பு
x
தினத்தந்தி 26 Aug 2021 1:32 PM IST (Updated: 26 Aug 2021 1:32 PM IST)
t-max-icont-min-icon

புதுச்சேரி சட்டசபைக்கான துணை சபாநாயகராக எம்.எல்.ஏ. ராஜவேலு இன்று பொறுப்பேற்று கொண்டார்.




புதுச்சேரி,

புதுச்சேரியில் துணை சபாநாயகர் பதவிக்கு யாரும் வேட்புமனு தாக்கல் செய்யாத நிலையில், என்.ஆர். காங்கிரஸ் எம்.எல்.ஏ. ராஜவேலு நெட்டப்பாக்கம் தொகுதியில் இருந்து போட்டியின்றி நேற்று தேர்வு செய்யப்பட்டார்.

இந்த நிலையில், புதுச்சேரியில் 15வது சட்டசபையின் முதல் கூட்டம் இன்று நடைபெற்றது.  இந்த கூட்டத்தொடரின் முதல் நாளான இன்று, புதுச்சேரி கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் திருக்குறளுடன் தனது உரையை தொடங்கி அவையில் பேசினார்.  புதுச்சேரி சட்டசபை வரலாற்றில் முதன்முறையாக அவர் தமிழில் உரையாற்றினார்.

அதனை தொடர்ந்து, புதுச்சேரியின் துணை சபாநாயகராக என்.ஆர். காங்கிரஸ் எம்.எல்.ஏ. ராஜவேலு பதவியேற்று கொண்டார். முதல்-அமைச்சர் ரங்கசாமி, எதிர்க்கட்சி தலைவர் சிவா ஆகியோர் ராஜவேலுவை சபாநாயகர் இருக்கையில் அமர வைத்தனர்.  புதுச்சேரியில் இன்று மாலை பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது.


Next Story