பீகாரில் பாக்மதி ஆற்றின் அரிப்பினால் பலர் வீடுகளை இழந்தனர்; ஆய்வு குழு அனுப்பி வைப்பு


பீகாரில் பாக்மதி ஆற்றின் அரிப்பினால் பலர் வீடுகளை இழந்தனர்; ஆய்வு குழு அனுப்பி வைப்பு
x
தினத்தந்தி 24 Aug 2021 2:02 PM IST (Updated: 24 Aug 2021 2:02 PM IST)
t-max-icont-min-icon

பீகாரின் முசாபர்பூர் நகரில் பாக்மதி ஆற்றின் அரிப்பினால் பலர் வீடுகளை இழந்துள்ளனர்.


முசாபர்பூர்,

பீகாரின் முசாபர்பூர் நகரில் பாக்மதி ஆற்றில் கனமழையை தொடர்ந்து வெள்ளம் பெருக்கெடுத்தது.  இந்த நிலையில், ஆற்றின் கரையோர பகுதிகளில் அமைந்துள்ள பலர் ஆற்றின் அரிப்பினால் வீடுகளை இழந்துள்ளனர்.

இதுபற்றி கத்ரா பகுதியின் வட்டார அதிகாரி பரஸ்நாத் கூறும்போது, ஆற்றின் அரிப்பு பற்றிய தகவல் எங்களுக்கு கிடைத்து உள்ளது.  அதனை ஆய்வு செய்ய குழு ஒன்றை அனுப்பி உள்ளோம்.  வீடுகளை இழந்தவர்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கப்படும் என கூறியுள்ளார்.


Next Story