மைசூரு-ஷீரடி இடையே வாராந்திர சிறப்பு ரெயில்கள் இயக்கம் - தென்மேற்கு ரெயில்வே தகவல்


மைசூரு-ஷீரடி இடையே வாராந்திர சிறப்பு ரெயில்கள் இயக்கம் - தென்மேற்கு ரெயில்வே தகவல்
x
தினத்தந்தி 17 July 2021 4:54 AM IST (Updated: 17 July 2021 4:54 AM IST)
t-max-icont-min-icon

மைசூரு-ஷீரடி இடையே வாராந்திர சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட உள்ளதாக தென்மேற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.

பெங்களூரு,

தென்மேற்கு ரெயில்வே வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் மைசூரு- ஷீரடி இடையே இருமார்க்கமாக வாராந்திர சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி வருகிற 26-ந் தேதி முதல் மைசூருவில் இருந்து ஷீரடிக்கு வாரந்தோறும் திங்கட்கிழமை ரெயில் புறப்பட்டு செல்கிறது. மறுமார்க்கமாக வருகிற 27-ந் தேதி முதல் ஷீரடியில் இருந்து மைசூருவுக்கு வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை ரெயில் புறப்பட்டு வருகிறது.

இந்த ரெயில்கள் இருமார்க்கமாகவும் மண்டியா, கெங்கேரி, கே.எஸ்.ஆர். பெங்களூரு, யஷ்வந்தபுரம், துமகூரு, அரிசிகெரே, பீரூர், சிக்ஜாஜூர், சித்ரதுர்கா, ராயபாக், பல்லாரி, ஒசப்பேட்டே, கொப்பல், கதக், பாதாமி, பாகல்கோட்டை, விஜயாப்புரா, சோலாப்பூர், குருத்வாடி, தவுனத், அகமதுநகர், பெல்லப்பூர் ஆகிய ரெயில் நிலையங்களில் நின்று செல்லும்.

Next Story