இமாசல பிரதேச முன்னாள் முதல்-மந்திரி உடல் அரசு மரியாதையுடன் தகனம்
இமாசல பிரதேச முன்னாள் முதல்-மந்திரி வீரபத்ர சிங்கின் உடல் அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது.
சிம்லா,
இமாசல பிரதேச முன்னாள் முதல்-மந்திரியும் காங்கிரஸ் மூத்த தலைவருமான வீரபத்ர சிங் நீண்டநாள் உடல்நல பாதிப்புகளால் சிம்லாவில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அங்கு கடந்த வியாழக்கிழமை அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதையடுத்து அவரின் உடல் ராம்பூரில் உள்ள அவரது இல்லத்தில் இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது.
பின்னா் தகனத்துக்காக அவரது உடல் ஊா்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது. ஊா்வலத்தில் மாநில முதல்-மந்திரி ஜெய்ராம் தாக்குா் மற்றும் அமைச்சா்கள் கலந்துகொண்டனா். மேலும், காங்கிரஸ் தலைவா் சோனியா காந்தி பூபேஷ் பகேல், காங்கிரஸ் பொருளாளா் பவன்குமார் பன்சால் உள்பட கட்சியின் மூத்த தலைவா்கள் இறுதிச் சடங்கில் பங்கேற்றனர். ஏராளமான பொதுமக்கள் இறுதிச் சடங்கில் கலந்துகொண்டனா்.
வீரபத்ர சிங்கின் உடலுக்கு காவல்துறையினா் துப்பாக்கி குண்டுகள் முழங்க அரசு மரியாதை செலுத்தினா். அவரின் மகன் விக்ரமாதித்ய சிங் இறுதிச் சடங்குகளை செய்தார்.
Related Tags :
Next Story