திரிணாமுல் காங்கிரசின் இளைஞர் அணி தலைவராக நடிகை சாயோனி கோஷ் நியமனம்
திரிணாமுல் காங்கிரசின் இளைஞர் அணி தலைவராக நடிகை சாயோனி கோஷ் நியமிக்கப்பட்டு உள்ளார்.
கொல்கத்தா,
மேற்கு வங்காளத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்ற திரிணாமுல் காங்கிரஸ் கட்சி மீண்டும் ஆட்சியமைத்தது. அக்கட்சியின் தலைவரான மம்தா பானர்ஜி முதல் மந்திரியாக செயல்பட்டு வருகிறார். இந்நிலையில், திரிணாமுல் காங்கிரஸ் கட்சி கூட்டம் இன்று நடந்தது.
இதில் பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. அதன்படி, அக்கட்சியின் இளைஞர் அணி தலைவராக நடிகை சாயோனி கோஷ் நியமிக்கப்பட்டு உள்ளார்.
அக்கட்சியின் பொது செயலாளராக மம்தாவின் உறவினரான அபிசேக் பானர்ஜி நியமிக்கப்பட்டு உள்ளார். கலாசார பிரிவு தலைவராக முன்னாள் திரைப்பட இயக்குனர் ராஜ் சக்ரபோர்த்தி நியமிக்கப்பட்டார்.
இதேபோன்று திரிணாமுல் காங்கிரசின் மாநில பொது செயலாளராக குணால் கோஷ் நியமனம் செய்யப்பட்டு உள்ளார். விவசாய அணி தலைவராக பழம்பெரும் தலைவர் புர்னேந்து போஸ் நியமிக்கப்பட்டார்.
Related Tags :
Next Story