தண்ணீர் குடிக்க முயன்றபோது பாத்திரத்தில் தலை சிக்கி தவித்த குரங்கு


தண்ணீர் குடிக்க முயன்றபோது பாத்திரத்தில் தலை சிக்கி தவித்த குரங்கு
x
தினத்தந்தி 5 Jun 2021 1:26 AM IST (Updated: 5 Jun 2021 1:26 AM IST)
t-max-icont-min-icon

தண்ணீர் குடிக்க முயன்றபோது பாத்திரத்தில் தலை சிக்கி தவித்த குரங்கு உணவு உண்ண முடியாமல் தண்ணீர் அருந்த முடியாமல் தவித்தது.

ஐதராபாத், 

தெலுங்கானா மாநிலம் மகபூபாபாத் குடியிருப்பு பகுதியில் குரங்குகள் உலா வந்தன. வெயில் கொடுமை காரணமாக ஒரு குரங்கு அலுமினிய பாத்திரத்தில் இருந்த தண்ணீரை குடிக்க முயன்றது. அப்போது எதிர்பாராதவிதமாக அதன் தலை அலுமினிய பாத்திரத்தில் மாட்டிக் கொண்டது. அந்த பாத்திரத்தை எடுக்க குரங்கு பல்வேறு முயற்சிகள் செய்தும் முடியவில்லை.

மேலும் அங்கு வந்த மற்றொரு குரங்கு முயற்சித்தும் பலன் இல்லை. இதனை அடுத்து அந்த குரங்கு உணவு உண்ண முடியாமல் தண்ணீர் அருந்த முடியாமல் தவித்தது. இது குறித்து அந்த பகுதி மக்கள் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். வனத்துறையினர் அந்த குரங்கை பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

சில நாட்களுக்கு முன்பு இதே போல் ஒரு நாய் குடத்தில் தண்ணீர் குடிக்க முயன்றபோது, அதன் தலை உள்ளே சிக்கி கொண்டது குறிப்பிடத்தக்கது.


Next Story