உத்தரபிரதேசம்: கள்ளச்சாரயம் குடித்த 22 பேர் உயிரிழப்பு
உத்தரபிரதேசத்தில் கள்ளச்சாரயம் குடித்தவர்களில் 22 பேர் உயிரிழந்தனர்.
லக்னோ,
உத்தரபிரதேச மாநிலம் அலிகார் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் அரசால் அனுமதிக்கப்பட்ட மதுக்கடை செயல்பட்டு வருகிறது. அந்த மதுக்கடையின் தினமும் நுற்றுக்கணக்கான நபர்கள் வந்து மதுபானங்களை வாங்கிச்செல்வது வழக்கம்.
இந்நிலையில், அந்த மதுக்கடையில் மதுவாங்கி குடித்த சிலர் கடந்த வெள்ளிக்கிழமை முதல் அடுத்தடுத்து உடல்நலக்குறைவு ஏற்பட்டு உயிரிழந்து வந்தனர். நேற்று வரை மொத்தம் 22 பேர் உயிரிழந்துள்ளனர். பலர் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த சம்பவ தொடர்பாக நடைபெற்ற முதல்கட்ட விசாரணையில், அரசால் அனுமதிக்கப்பட்ட மதுபானக்கடையில் சட்டவிரோதமாக கள்ளச்சாராயம் விற்பனை செய்யப்பட்டுள்ளது.
அந்த கள்ளச்சாராயத்தை வாங்கிக்குடிந்த 22 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது தெரியவந்துள்ளது. இந்த உயிரிழப்புகள் தொடர்பாக உரிய விசாரணை நடைபெறும் என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த சம்பவம் தொடர்பாக இதுவரை 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் மற்றும் 5 அதிகாரிகள் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story