மராட்டியத்தில் கடும் கட்டுப்பாடுகள் மேலும் 2 வாரத்துக்கு நீட்டிக்க வாய்ப்பு


மராட்டியத்தில் கடும் கட்டுப்பாடுகள் மேலும் 2 வாரத்துக்கு நீட்டிக்க வாய்ப்பு
x
தினத்தந்தி 12 May 2021 7:22 AM IST (Updated: 12 May 2021 2:13 PM IST)
t-max-icont-min-icon

மராட்டியத்தில் கடும் கட்டுப்பாடுகள் மேலும் 2 வாரத்துக்கு நீட்டிக்க அரசு முடிவு செய்து இருப்பதாக மந்திராலயா அதிகாரி ஒருவர் கூறினார்.

மும்பை,

மராட்டியத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. குறிப்பாக மும்பை, தானே உள்பட 15 மாவட்டங்களில் பாதிப்பு வெகுவாக குறைந்து உள்ளது. ஆனால் 21 மாவட்டங்களில் பாதிப்பு இன்னும் குறையவில்லை.

கடந்த மாதம் 14-ந் தேதி முதல் நடைமுறையில் உள்ள ஊரடங்கை போன்ற கடுமையான கட்டுப்பாடுகள் தான் சில மாவட்டங்களில் கொரோனா தொற்று குறைவதற்கான காரணம் என்று கூறப்படுகிறது.

இந்தநிலையில் அனைத்து மாவட்டங்களிலும் கொரோனா தொற்றை விரட்டியடிக்கும் முனைப்புடன் அரசு செயல்பட்டு வருகிறது. எனவே வருகிற 15-ந் தேதி நிறைவு பெறும் கட்டுப்பாடுகளை மேலும் 2 வாரத்துக்கு நீட்டிக்க அரசு முடிவு செய்து இருப்பதாக மந்திராலயா அதிகாரி ஒருவர் கூறினார். இது தொடர்பாக மந்திரி சபை கூட்டத்தில் ஆலோசித்து முடிவு எடுக்கப்பட உள்ளது.

Next Story