தார்வார் பல்கலைக்கழகத்திற்குள் புகுந்த காட்டு யானை
பல்கலைக்கழக வளாகத்திற்குள் காட்டுயானை புகுந்தது.
தார்வார்: தார்வார் டவுனில் கர்நாடக பல்கலைக்கழகம் உள்ளது. இந்த பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று காலை 6 மணி அளவில் ஒரு காட்டு யானை புகுந்தது. அந்த காட்டு யானை பல்கலைக்கழக வளாகத்தில் புகுந்து அங்குமிங்கும் சுற்றியது. பின்னர் மாணவர்கள் தங்கும் விடுதி அருகே காட்டு யானை சென்றது.
இதை அறிந்த மாணவர்கள் விடுதி கட்டிடம் மீது ஏறி நின்று காட்டு யானையை வேடிக்கை பார்த்தப்படி இருந்தனர். இதற்கிடையே சம்பவம் பற்றி தகவல் அறிந்ததும் வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அவர்கள் பல்கலைக்கழகத்திற்குள் புகுந்த காட்டு யானையை விரட்டும் பணியில் ஈடுபட்டனர். இதனால் பல்கலைக்கழக மாணவர்கள், அதையொட்டிய பகுதி பொதுமக்கள் வெளியே வர வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டது.
சுமார் 2 மணி நேர போராட்டத்திற்கு பிறகு காட்டு யானை வனப்பகுதிக்குள் விரட்டியடிக்கப்பட்டது. இதற்கிடையே காட்டு யானையை தங்கும் விடுதி கட்டிடம் மீது ஏறி பார்த்துக்கொண்டிருந்த மாணவர்களை தேனீக்கள் கொட்டின. இதில் சில மாணவர்கள் காயமடைந்தனர். இந்த சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story