கோடை வெயிலுக்கு இடையே குடகில் திடீர் கனமழை


குடகு ராஜா சீட் வளாகத்தில் ஒரு மரம் முறிந்து விழுந்து கிடக்கிறது.
x
குடகு ராஜா சீட் வளாகத்தில் ஒரு மரம் முறிந்து விழுந்து கிடக்கிறது.
தினத்தந்தி 14 April 2021 9:37 PM (Updated: 14 April 2021 9:37 PM)
t-max-icont-min-icon

கோடை வெயிலுக்கு இடையே குடகில் திடீரென கனமழை பெய்தது.

குடகு: கோடை வெயிலுக்கு இடையே குடகில் திடீரென கனமழை பெய்தது. 

கோடை வெயில் 

கர்நாடகத்தில் கோடை வெயில் சுட்டெரித்து வருகிறது. தலைநகர் பெங்களூரு உள்பட 30 மாவட்டங்களிலும் வெயில் வாட்டி வதைத்து வருகிறது. இதனால் மதிய நேரங்களில் மக்கள் வெளியே தலைகாட்டுவது இல்லை. மக்கள் வீடுகளுக்குள் முடங்கி விட்டனர். 

வெயிலில் இருந்து தப்பிக்க குளிர்பானங்களை மக்கள் குடித்து வருகிறார்கள். மேலும் தர்ப்பூசணி பழம் விற்பனையும் சூடுபிடித்து உள்ளது. இந்த நிலையில் மாநிலத்தில் ஒரு சில பகுதிகளில் கோடை மழை பெய்து வருகிறது. பெங்களூருவில் கூட நேற்று 15 நிமிடம் லேசான மழை பெய்து இருந்தது.
 
திடீர் கனமழை 

இந்த நிலையில் கர்நாடகத்தின் சுவிட்சர்லாந்து என்று வர்ணிக்கப்படும் குடகு மாவட்டத்திலும் கடந்த சில தினங்களாக கோடை வெயில் சுட்டெரித்து வந்தது. ஆனால் 2 நாட்களாக வெயிலின் தாக்கம் குறைந்து, சீதோஷ்ண நிலை பெய்தது. இந்த நிலையில் குடகில் நேற்று காலை முதலே வானம் மேகமூட்டமாக காட்சி அளித்தது. 

நேற்று மதியம் லேசான மழை பெய்தது. நேரம் செல்ல செல்ல திடீரென கனமழை கொட்டி தீர்த்தது. மடிகேரி, விராஜ்பேட்டை, சோமவார்பேட்டை, பொன்னம்பேட்டை ஆகிய தாலுகாக்களில் உள்ள கிராமங்களில் கனமழை வெளுத்து வாங்கியது. 

கனமழைக்கு மடிகேரி அருகே உள்ள பிரசித்தி பெற்ற சுற்றுலா தலமான ராஜா சீட் வளாகத்திற்குள் ஒரு மரம் முறிந்து விழுந்தது. அந்த மரத்தை நகரசபை ஊழியர்கள் அப்புறப்படுத்தினர். திடீர் கனமழையால் குடகு மாவட்ட மக்கள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.

Next Story