உலகிலேயே உயரமான படேல் சிலையை பார்வையிட்டோர் எண்ணிக்கை 50 லட்சத்தை தாண்டியது


உலகிலேயே உயரமான படேல் சிலையை பார்வையிட்டோர் எண்ணிக்கை 50 லட்சத்தை தாண்டியது
x
தினத்தந்தி 15 March 2021 11:17 PM IST (Updated: 15 March 2021 11:17 PM IST)
t-max-icont-min-icon

குஜராத்தின் கெவாடியா மாவட்டத்தில் நர்மதையாற்றில் உள்ள சர்தார் சரோவர் அணை அருகே 182 மீட்டர் உயரத்தில் உலகிலேயே உயரமான சர்தார் வல்லபாய் படேல் சிலை கடந்த 2018-ம் ஆண்டு திறந்து வைக்கப்பட்டது.

படேலின் 143-வது பிறந்தநாளையொட்டி பிரதமர் நரேந்திரமோடி இந்த சிலையை நாட்டிற்கு அர்ப்பணித்தார்.

ஒற்றுமையின் சிலை என அழைக்கப்படும் இந்த பிரமாண்ட சிலையை தினமும் ஆயிரக்கணக்கானவர்கள் கண்டு பிரமித்து வருகிறார்கள். கடந்த ஆண்டு (2020) கொரோனா பரவல் காரணமாக பார்வையாளர் வருகை பாதிக்கப்பட்டது. இதற்கிடையே இந்த சிலையை இதுவரை பார்வையிட்ட சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை 50 லட்சத்தை தாண்டியுள்ளதாக மாநில துணை தலைமைச்செயலாளர் ராஜீவ் குப்தா தெரிவித்துள்ளார்.

படேல் சிலையை பார்வையிடுவதற்காக சிறப்பு ரெயில் மற்றும் சிறப்பு விமானத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டது நினைவுகூரத்தக்கது.

 


Next Story