பா.ம.க.வுக்கு மாம்பழம் சின்னம் தேர்தல் கமிஷன் ஒதுக்கியது
பா.ம.க.வுக்கு அந்த கட்சி ஏற்கனவே போட்டியிட்ட பொது சின்னமான மாம்பழம் சின்னத்தை ஒதுக்கி இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்து உள்ளது.
புதுடெல்லி,
5 மாநில தேர்தலை முன்னிட்டு அங்கீகரிக்கப்பட்ட மாநில கட்சிகள் (குறிப்பிட்ட வாக்கு சதவீதத்தை பெறாதவை) மற்றும் அங்கீகரிக்கப்படாத கட்சிகளுக்கு தேர்தல் கமிஷன் சின்னங்களை ஒதுக்கி வருகிறது. தமிழகத்தில் இதற்கு முன்பு பல கட்சிகளுக்கு சின்னங்கள் ஒதுக்கப்பட்டுவிட்டன.
இந்த நிலையில் தற்போது பா.ம.க.வுக்கு அந்த கட்சி ஏற்கனவே போட்டியிட்ட பொது சின்னமான மாம்பழம் சின்னத்தை ஒதுக்கி இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்து உள்ளது. அ.தி.மு.க. கூட்டணியி்ல் பா.ம.க.வுக்கு 23 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த தொகுதிகளில் மாம்பழம் சின்னத்தில் பா.ம.க போட்டியிடலாம். புதுச்சேரியில் அந்த கட்சிக்கு மாம்பழம் சின்னம் அங்கீகார சின்னமாக இருப்பதை சுட்டிக்காட்டியே தமிழகத்திலும் அதை கேட்டுப்பெற்று இருப்பது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story