பிரபல வங்காள நடிகை பாயல் பா.ஜனதாவில் சேர்ந்தார்
நடிகர், நடிகைகள், ஆளும் கட்சியான திரிணாமுல் காங்கிரசிலும், எதிர்க்கட்சியான பா.ஜனதாவிலும் சேர்ந்து வருகிறார்கள்.
கொல்கத்தா,
மேற்கு வங்காள சட்டசபை தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்பட உள்ளது. இதையொட்டி, வங்காள மொழி நடிகர், நடிகைகள், ஆளும் கட்சியான திரிணாமுல் காங்கிரசிலும், எதிர்க்கட்சியான பா.ஜனதாவிலும் சேர்ந்து வருகிறார்கள். கிரிக்கெட் வீரர் மனோஜ் திவாரி, வங்காள மொழி நடிகர்கள் ராஜ் சக்ரவர்த்தி, காஞ்சன் மல்லிக், சயோனி கோஷ் உள்ளிட்டோர் நேற்று முன்தினம் மம்தா பானர்ஜி முன்னிலையில் திரிணாமுல் காங்கிரசில் சேர்ந்தனர்.
இந்தநிலையில், பிரபல வங்காள மொழி நடிகை பாயல் சர்கார் நேற்று மாநில பா.ஜனதா தலைவர் திலீப் கோஷ் முன்னிலையில் பா.ஜனதாவில் சேர்ந்தார். நடிகர் யாஷ் தாஸ்குப்தா, முன்னாள் கிரிக்கெட் வீரர் அசோக் திண்டா ஆகியோரும் பா.ஜனதாவில் சேர்ந்துள்ளனர்.
Related Tags :
Next Story