புதுச்சேரி பாரதிதாசன் மகளிர் கல்லூரி மாணவிகளுடன் கலந்துரையாடிய ராகுல்காந்தி


புதுச்சேரி பாரதிதாசன் மகளிர் கல்லூரி மாணவிகளுடன் கலந்துரையாடிய ராகுல்காந்தி
x
தினத்தந்தி 17 Feb 2021 5:13 PM IST (Updated: 17 Feb 2021 5:13 PM IST)
t-max-icont-min-icon

புதுச்சேரி மீனவ கிராமமான சோலைநகருக்கு ராகுல்காந்தி காரில் சென்றார். அங்கு மீனவ பெண்களை சந்தித்துப் பேசினார்.

புதுச்சேரி

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி இன்று  புதுச்சேரி  வருகை தந்தார். அவரை முதல்-அமைச்சர் நாராயணசாமி, காங்கிரஸ் தலைவர் ஏ.வி.சுப்ரமணியன், வைத்திலிங்கம் எம்.பி. மற்றும் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் வரவேற்றனர்.

வரவேற்பு நிகழ்ச்சி முடிந்ததும் விமான நிலையத்தில் இருந்து நேராக மீனவ கிராமமான சோலைநகருக்கு ராகுல்காந்தி காரில் சென்றார். அங்கு மீனவ பெண்களை சந்தித்துப் பேசினார்.

அப்போது, கடலில் செல்லும் மீனவர்களுக்கு காப்புரிமை இருக்கவேண்டும். மேலும் அவர்கள் மீன்பிடிக்க பயன்படுத்தும் உபகரணங்கள் அனைத்தும் நவீனமயமாக்கப்பட்டவையாக இருக்கவேண்டும். அப்போதுதான் அவர்களுடைய வாழ்வாதாரம் சிறப்பாக அமையும். 

அடுத்த முறை புதுச்சேரிக்கு வரும்போது, மீனவர்களுடன் கடலுக்கு சென்று மீன் பிடிப்பது எப்படி என்பதை பார்ப்பேன் என்று பேசிய ராகுல் மக்களின் கோரிக்கைகளைக் கேட்டறிந்தார்.

Next Story