மத்திய மந்திரி அஸ்வினி குமார் செளபேவிற்கு கொரோனா தொற்று


மத்திய மந்திரி அஸ்வினி குமார் செளபேவிற்கு கொரோனா தொற்று
x
தினத்தந்தி 28 Dec 2020 11:53 PM IST (Updated: 28 Dec 2020 11:53 PM IST)
t-max-icont-min-icon

மத்திய சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை இணை மந்திரி அஸ்வினி குமார் செளபேவிற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

புதுடெல்லி,

கடந்த மார்ச் மாதம் முதல் கொரோனா நோய்த் தொற்றால் மத்திய உள்துறை மந்திரி உள்பட நாட்டில் பல அரசியல் கட்சித் தலைவர்கள் பாதிக்கப்பட்டு வருகின்றார்கள்.

இந்நிலையில், மத்திய சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை இணை மந்திரி அஸ்வினி குமார் செளபே கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டடுள்ளதாக தகவல் வெளியானது. 

இதுகுறித்து அவர் வெளியிட்ட டுவிட்டரில் பதிவில், 

கொரோனா நோய்த்தொற்றின் லேசான அறிகுறி தெரிந்ததையடுத்து, சோதனை செய்ததில் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மருந்துவர்களின் ஆலோசனைப்படி, நான் வீட்டிலேயே தனிமைப்படுத்தி கொண்டேன். மேலும், கடந்த சில நாள்களாக என்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் பரிசோதனை செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்வதாக தெரிவித்துள்ளார்.

Next Story