‘கோவேக்சின்’ தடுப்பூசி: 3-ஆம் கட்ட மருத்துவ பரிசோதனைக்கு அனுமதி


‘கோவேக்சின்’ தடுப்பூசி:  3-ஆம் கட்ட மருத்துவ பரிசோதனைக்கு அனுமதி
x
தினத்தந்தி 23 Oct 2020 7:43 AM IST (Updated: 23 Oct 2020 7:43 AM IST)
t-max-icont-min-icon

மூன்றாவது கட்ட பரிசோதனை 28,500 பேரிடம் நடத்த பாரத் பயோடெக் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

புதுடெல்லி,

மனித குலத்தை மிரட்டி வரும் கொரோனா வைரஸ் தொற்றுக்கு, முடிவு கட்ட  உலக நாடுகள் தயாராகிவிட்டன. சீனாவின் உகான் நகரில் முதன் முதலாக கடந்த ஆண்டு இறுதியில் வெளிப்பட்ட வைரஸ், உலகம் முழுவதும் வியாபித்து உள்ளது. வைரஸ் தொற்றுக்கு எதிராக இந்தியா, அமெரிக்கா, ரஷ்யா உள்ளிட்ட உலகின் முன்னணி நாடுகள் தடுப்பூசி கண்டுபிடிக்கும் பணியில் இறங்கின. இதில்,   கொரோனா தடுப்பூசியை பதிவு செய்துவிட்டதாக ரஷ்யா முதல் நாடாக அறிவித்து. 

பிற தடுப்பூசிகள் இன்னும் மருத்துவ பரிசோதனைகளில் உள்ளன. இந்த ஆண்டு இறுதி அல்லது அடுத்த ஆண்டு துவக்கத்தில் தடுப்பூசிகள் செயல்பாட்டுக்கு வரும் என்று நம்பப்படுகிறது.  இந்த நிலையில், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலுடன் இணைந்து பாரத் பயோ டெக் நிறுவனம் கண்டுபிடித்த ‘கோவேக்சின்’ தடுப்பு  மருந்து 3 ஆம் கட்ட பரிசோதனை தொடங்க உள்ளது. இதற்கான அனுமதியை இந்திய மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு வழங்கியுள்ளது. 

 மூன்றாவது கட்ட பரிசோதனை 28,500 பேரிடம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. நாட்டின் 10 மாநிலங்களில் டெல்லி, மும்பை, பாட்னா, லக்னோ உள்ளிட்ட 19 நகரங்களில் பரிசோதனை நடைபெற உள்ளது. இதுதவிர ஜைடெஸ் கெடில்லா நிறுவனம் தயாரித்துள்ள கொரோனா தடுப்பு மருந்து தற்போது இரண்டாம் கட்ட பரிசோதனையிலும், சீரம் நிறுவனத்தின் தயாரிப்பான அஸ்ட்ரா ஜெனக்கா மருந்து 2 மற்றும் 3-ம் கட்ட பரிசோதனையிலும் உள்ளன .

விலங்குகளிடம் நடத்தப்பட்ட பரிசோதனையில் கோவேக்சின் வலுவான நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்குவது தெரியவந்துள்ளது என பாரத்பயோடெக் நிறுவனம் அண்மையில் கூறியிருந்தது நினைவிருக்கலாம். 

Next Story