கோழிக்கோடு விமான விபத்து: பலி எண்ணிக்கை 21 ஆக உயர்வு
கோழிக்கோடு விமான விபத்தில் பலி எண்ணிக்கை 21 ஆக உயர்ந்துள்ளது.
கோழிக்கோடு,
துபாயில் இருந்து கேரள மாநிலம் கோழிக்கோடு விமான நிலையத்திற்கு கடந்த 7-ந் தேதி வந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் ஓடுதளத்தில் இருந்து விலகி அங்கிருந்த பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியது. இதில் விமானம் 2 துண்டாக உடைந்தது. நாட்டையே அதிர்ச்சியில் ஆழ்த்திய இந்த விபத்தில் 2 விமானிகள் உள்பட 18 பேர் பலியாகினர். பலர் படுகாயம் அடைந்து ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தனர்.
அதில் 2 பயணிகள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இதனால் விமான விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 20 ஆக இருந்து வந்தது. இந்த நிலையில் தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த மஞ்சுளா குமாரி என்ற பெண் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இரவு உயிரிழந்தார். இதன்மூலம் பலி எண்ணிக்கை 21 ஆக உயர்ந்துள்ளது.
ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள தனது கணவரை பார்க்கச்சென்ற மஞ்சுளா குமாரி, கொரோனா ஊரடங்கு காரணமாக அங்கேயே தங்கியிருந்தார். நாடு திரும்பியபோது தான் விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளார்.

Related Tags :
Next Story