ஜார்கண்ட் முன்னாள் முதல்-மந்திரி சிபு சோரன், மனைவிக்கு கொரோனா தொற்று
ஜார்கண்ட் முன்னாள் முதல்-மந்திரி சிபு சோரன் மற்றும் அவரது மனைவிக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு உள்ளது.
ராஞ்சி,
ஜார்கண்ட் மாநில முன்னாள் முதல்-மந்திரியும், ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியின் தலைவரும், மாநிலங்களவை எம்.பி.யுமான சிபு சோரனுக்கு (வயது 76) கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது.
அவரது மனைவி ரூபி சோரனுக்கும் தொற்று பாதிப்பு ஏற்பட்டு இருக்கிறது. இந்த தகவலை சிபுசோரன், ரூபி சோரன் தம்பதியரின் மகனும், மாநில முதல்-மந்திரியுமான ஹேமந்த் சோரன் டுவிட்டரில் நேற்று தெரிவித்துள்ளார்.
அதில் அவர் தனது தந்தைக்கும், தாய்க்கும் வெள்ளிக்கிழமை இரவு கொரோனா தொற்று உறுதியானதாகவும், அவர்கள் வீட்டில் தங்களை தனிமைப்படுத்திக்கொண்டு சிகிச்சை பெறுவதாகவும் தெரிவித்துள்ளார்.
நாட்டின் நல்வாழ்த்துகளுடனும், ஜார்கண்ட் மக்களின் வாழ்த்துகளுடனும் அவர்கள் விரைவில் நம்மிடையே திரும்பி வருவார்கள் எனவும் அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
Related Tags :
Next Story