பேஸ்புக் விவகாரம்: காங்கிரஸ் குற்றச்சாட்டுக்கு பாரதீய ஜனதா பதிலடி

புதுடெல்லி,
பாரதீய ஜனதா கட்சியினரின் வெறுப்பு பேச்சுகள் பேஸ்புக்கில் வெளியாவதை அந்த வலைத்தள நிறுவனம் தடுத்து நிறுத்த தவறி விட்டதாக காங்கிரஸ் குற்றம்சாட்டி இருக்கிறது. இது தொடர்பாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் பேஸ்புக் தலைமை செயல் அதிகாரி மார்க் ஜூகர்பெர்க்குக்கு கடிதம் எழுதி உள்ளார்.
இந்த விவகாரம் பற்றி பேட்டி அளித்த மத்திய மந்திரியும் பாரதீய ஜனதா மூத்த தலைவருமான ரவிசங்கர் பிரசாத், காங்கிரசின் செல்வாக்கு குறைந்துவிட்டதால், பேஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்களில் அந்த கட்சி ஆதிக்கம் செலுத்த விரும்புவதாக பதிலடி கொடுத்தார். இதுபோன்ற தளங்களில் கருத்து தெரிவிக்கும் உரிமை அனைவருக்கும் உள்ளது என்றும் அப்போது அவர் கூறினார்.
தான் விரும்புவது போல் செயல்படாத நிறுவனங்கள் பாரதீய ஜனதா, ஆர்.எஸ்.எஸ். நிர்பந்தந்தின்படி செயல்படுவதாக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி நம்புவதாகவும் ரவிசங்கர் பிரசாத் குற்றம்சாட்டினார்.

Related Tags :
Next Story