பெண் மருந்தாளுனருக்கு கொரோனா: ஆஸ்பத்திரி ஊழியர்கள் 50 பேர் தனிமைப்படுத்தப்பட்டனர்
பெண் மருந்தாளுனருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதால், ஆஸ்பத்திரி ஊழியர்கள் 50 பேர் தனிமைப்படுத்தப்பட்டனர்.
கோழிக்கோடு,
கேரளாவின் உள்ளியேரியில் உள்ள மலபார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் வேலை பார்க்கும் பெண் மருந்தாளுனர் ஒருவர் 8 மாத கர்ப்பமாக உள்ளார். உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் அவருக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் கொரோனா இருப்பது நேற்று உறுதியானது. இதனையடுத்து அவருடன் தொடர்புடைய ஆஸ்பத்திரி ஊழியர்கள் 80 பேரில் 50 பேர் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர்.
மேலும் அவர் தனது வீட்டின் அருகில் உள்ள கோவிலுக்கும் சென்று வந்துள்ளார். எனவே அவர் சந்தித்த நபர்களுக்கும் கொரோனா பரிசோதனை செய்ய முடிவு செய்துள்ளனர். பெண் மருந்தாளுனரின் கணவர் வங்கி அதிகாரியாக பணியாற்றுகிறார். எனவே அவரது சக வங்கி ஊழியர்களையும் தனிமைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.
Related Tags :
Next Story