நிர்பயா கொலை குற்றவாளி பவன் குமாரின் புதிய சீராய்வு மனு தள்ளுபடி


நிர்பயா கொலை குற்றவாளி பவன் குமாரின் புதிய சீராய்வு மனு தள்ளுபடி
x
தினத்தந்தி 19 March 2020 11:38 AM IST (Updated: 19 March 2020 11:38 AM IST)
t-max-icont-min-icon

நிர்பயா கொலை குற்றவாளி பவன் குமாரின் புதிய சீராய்வு மனுவையும் உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

புதுடெல்லி,

நிர்பயா வழக்கு குற்றவாளிகள் 4 பேருக்கும் வரும் வெள்ளிக்கிழமை அதிகாலை 5.30 மணிக்கு தூக்குத் தண்டனை நிறைவேற்றப்பட உள்ளது. இந்த தூக்குத் தண்டனை நிறைவேற்றப்படுவதில் இருந்து தப்பிக்க குற்றவாளிகள் நீதிமன்றத்தில் வழக்குக்கு மேல் வழக்குப் போட்டு தண்டனையை தாமதப்படுத்தும் முயற்சி மேற்கொண்டு வருகின்றனர்.

இதற்கிடையே,  குற்றவாளிகளில் ஒருவரான  பவன் குமார் தனது தண்டனையை ஆயுள் தண்டனையாக மாற்றி உத்தரவிட வேண்டுமென உச்ச நீதிமன்றத்தில் மனு அளித்திருந்தார். அதனை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்த நிலையில் அதை எதிர்த்து பவன் குமார் தற்போது மறுசீராய்வு மனுத் தாக்கல் செய்து இருந்தார்.  இந்த நிலையில், பவன் குமாரின் மறுசீராய்வு மனுவை உச்ச நீதிமன்றம்  இன்று தள்ளுபடி செய்துள்ளது.

குற்றவாளிகள் 4 பேரின் அனைத்து மனுக்களும் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதால், நாளை காலை தூக்கிலிடுவது ஏறக்குறைய உறுதி செய்யப்பட்டுள்ளது. 


Next Story