குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக தொடர் போராட்டம்: போராட்டக்குழுவுடன் மத்தியஸ்தர்கள் குழு பேச்சுவார்த்தை


குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக தொடர் போராட்டம்: போராட்டக்குழுவுடன் மத்தியஸ்தர்கள் குழு பேச்சுவார்த்தை
x
தினத்தந்தி 19 Feb 2020 2:18 PM (Updated: 19 Feb 2020 2:18 PM)
t-max-icont-min-icon

டெல்லியில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக போராடி வரும் போராட்டக்காரர்களை உச்சநீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட மத்தியஸ்தர் குழுவினர் சந்தித்து பேசினர்.

புதுடெல்லி,

டெல்லி ஷாகீன்பாக் பகுதியில் குடியுரிமை திருத்த சட்டம் மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவற்றுக்கு எதிராக 2 மாதங்களுக்கும் மேலாக பெண்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். இந்தநிலையில் டெல்லியில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக போராடி வரும் போராட்டக்காரர்களை  உச்சநீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட மத்தியஸ்தர் குழுவினர் சந்தித்து பேசினர். 

அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த சஞ்சய் ஹெக்டே மற்றும் சாதனா ராமச்சந்திரன் ஆகியோரை கடந்த திங்களன்று,  மத்தியஸ்தர்களாக உச்சநீதிமன்றம் நியமித்தது. அந்த குழுவினர், டெல்லியில்  போராட்டகாரர்களை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். 

போராட்டகாரர்களை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்திய சஞ்சய் ஹெக்டே மற்றும் சாதனா ராமச்சந்திரன் ஆகியோர் செய்தியாளர்களிடம் கூறுகையில்,

டெல்லியில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக போராடி வரும் போராட்டக்காரர்களை சந்தித்து பேசினோம். அவர்களின் குரல்களுக்கு செவிசாய்த்தோம். ஒரே நாளில் பேச்சுவார்த்தைகளை முடிக்க முடியாததால் நாளை நாங்கள் திரும்பி வருவோம் என்று அவர்களிடம் தெரிவித்தோம். நாங்கள் நாளை திரும்பி வர வேண்டும் என்று அவர்கள் விரும்புகிறார்கள். எனவே நாங்கள் வருவோம்.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர். 

Next Story