பாலியல் பலாத்கார குற்றச்சாட்டு; பா.ஜ.க. எம்.எல்.ஏ. உள்பட 7 பேர் மீது எப்.ஐ.ஆர். பதிவு


பாலியல் பலாத்கார குற்றச்சாட்டு; பா.ஜ.க. எம்.எல்.ஏ. உள்பட 7 பேர் மீது எப்.ஐ.ஆர். பதிவு
x
தினத்தந்தி 19 Feb 2020 6:20 PM IST (Updated: 19 Feb 2020 6:20 PM IST)
t-max-icont-min-icon

உத்தர பிரதேசத்தில் பா.ஜ.க. எம்.எல்.ஏ. உள்பட 7 பேர் மீது பாலியல் பலாத்கார குற்றச்சாட்டில் எப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்டு உள்ளது.

பதோஹி,

உத்தர பிரதேசத்தில் பதோஹி தொகுதியின் பா.ஜ.க. எம்.எல்.ஏ.வாக இருந்து வருபவர் ரவீந்திரநாத் திரிபாதி.  இவர் மீது 40 வயதுடைய பெண் ஒருவர் போலீசில் கற்பழிப்பு புகார் ஒன்றை அளித்து உள்ளார்.

அந்த புகாரில், கடந்த 2017ம் ஆண்டு திரிபாதி மற்றும் அவரது கூட்டாளிகள் 6 பேர் தன்னை ஓட்டல் ஒன்றில் வைத்து ஒரு மாத காலம் தொடர்ச்சியாக கற்பழித்து வந்தனர் என தெரிவித்து உள்ளார்.

இதனை அடுத்து கர்ப்பமடைந்த தன்னை கட்டாயப்படுத்தி கருக்கலைப்பு செய்யவும் வைத்தனர் என தெரிவித்து உள்ளார்.

இதுபற்றி துணை போலீஸ் சூப்பிரெண்டு ரவீந்திர வர்மாவிடம் விசாரணை ஒப்படைக்கப்பட்டது.  அவர் அளித்த அறிக்கையின்பேரில், எம்.எல்.ஏ. திரிபாதி மற்றும் அவரது கூட்டாளிகள் உள்பட 7 பேர் மீது எப்.ஐ.ஆர். ஒன்று பதிவு செய்யப்பட்டு உள்ளது.

அந்த பெண்ணின் வாக்குமூலம் மாஜிஸ்திரேட் ஒருவர் முன் பெறப்பட்டு அதன்பின்னர் சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும் என போலீஸ் சூப்பிரெண்டு ராம்பதன் சிங் கூறியுள்ளார்.

Next Story