காஷ்மீரில் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட தேசிய மாநாடு கட்சி முடிவு


காஷ்மீரில் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட தேசிய மாநாடு கட்சி முடிவு
x
தினத்தந்தி 17 Feb 2020 12:16 PM IST (Updated: 17 Feb 2020 12:16 PM IST)
t-max-icont-min-icon

காஷ்மீரில் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட தேசிய மாநாடு கட்சி முடிவு செய்துள்ளது.

ஜம்மு, 

ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் 11 ஆயிரத்துக்கும் அதிகமான இடங்களை கொண்டுள்ள உள்ளாட்சி அமைப்புகளுக்கு அடுத்த மாதம் 5-ந் தேதி முதல் 8 கட்டங்களாக தேர்தல் நடக்க உள்ளது.

இந்த தேர்தலில் தேசிய மாநாடு கட்சி போட்டியிட முடிவு எடுத்து, இது தொடர்பாக அந்த யூனியன் பிரதேச தலைமை தேர்தல் அதிகாரி சைலேந்திர குமாருக்கு கடிதம் எழுதி உள்ளது.

அந்த கட்சியின் மத்திய செயலாளர் ரத்தன்லால் குப்தா எழுதியுள்ள கடிதத்தில், ஜனநாயக வழிமுறைகளில் வலுவான நம்பிக்கை கொண்டுள்ளதால் உள்ளாட்சி தேர்தலில் தங்கள் கட்சி போட்டியிட விரும்புவதாக தெரிவித்துள்ளார்.

அதே நேரத்தில் தங்கள் கட்சியின் தலைவர் பரூக் அப்துல் லா, துணை தலைவர் உமர் அப்துல்லா, பொதுச்செயலாளர் அலி முகமது சாகர் ஆகியோர் பொது பாதுகாப்பு சட்டத்தின்கீழ் காவலில் உள்ளதால், தேர்தலில் பங்கேற்பது நடைமுறை சாத்தியமற்றதாக இருப்பதாகவும், சுதந்திரமாக பிரசாரம் செய்ய ஏற்றவகையில் தடைகள் அகற்றப்பட வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டு உள்ளார்.

Next Story