உள்துறைக்கு ரூ.1.05 லட்சம் கோடி, ராணுவத்துக்கு ரூ.3.37 லட்சம் கோடி - மத்திய பட்ஜெட்டில் ஒதுக்கீடு
மத்திய பட்ஜெட்டில் ராணுவத்துக்கு ரூ.3.37 லட்சம் கோடியும், உள்துறைக்கு ரூ.1.05 லட்சம் கோடியும் ஒதுக்கப்பட்டு உள்ளது.
புதுடெல்லி,
மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் 2020-21-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை நேற்று தாக்கல் செய்தார். இதில் ராணுவத்துக்கு ரூ.3.37 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு இருந்தது.
இது கடந்த ஆண்டு பட்ஜெட் ஒதுக்கீடான ரூ.3.18 லட்சம் கோடியைவிட 5.63 சதவீதம் கூடுதலாகும். அதேநேரம் கடந்த ஆண்டு மாற்றியமைக்கப்பட்ட மதிப்பீடான ரூ.3.31 லட்சம் கோடியை விட 1.8 சதவீதமே அதிகம் ஆகும்.
ராணுவத்துக்கு ஒதுக்கப்பட்டு உள்ள மொத்த ஒதுக்கீட்டில் (ரூ.3.37 லட்சம் கோடியில்), புதிய ஆயுதங்கள், விமானங்கள், போர்க்கப்பல்கள் உள்ளிட்ட ராணுவ தளவாடங்கள் வாங்குவதற்கு மூலதன செலவீடாக ரூ.1.13 லட்சம் கோடி ஒதுக்கப்படுகிறது. இதைப்போல ஊதியம், பராமரிப்பு உள்ளிட்ட வருவாய் செலவினங்களுக்காக ரூ.2.09 கோடி ஒதுக்கப்படுவதாக நிர்மலா சீதாராமன் கூறினார்.
அதேநேரம் ஓய்வூதிய பலன்களுக்காக ரூ.1.33 லட்சம் கோடி தனியாக ஒதுக்கப்பட்டு உள்ளது. இதையும் சேர்த்தால் ராணுவத்துக்கு என ஒட்டுமொத்தமாக ரூ.4.70 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.
மத்திய பட்ஜெட்டில் ராணுவத்துக்கு ஒதுக்கப்பட்டு உள்ள நிதி ஒதுக்கீடு பாதுகாப்பு துறைக்கு போதாது என பாதுகாப்பு கல்வி மற்றும் ஆய்வு நிறுவனத்தை சேர்ந்த லட்சுமண் பெகேரா கூறியுள்ளார். எனினும் நாட்டின் பொருளாதார நிலைமையையும் கருத்தில் கொள்ள வேண்டியிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
இதற்கிடையே உள்துறைக்கு ரூ.1.05 லட்சம் கோடி மத்திய பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்டு உள்ளது. இது கடந்த ஆண்டை ஒப்பிடுகையில் (ரூ.1.03 லட்சம் கோடி) சுமாரான அதிகரிப்பாகும். இதில் பெரும்பகுதி அதாவது ரூ.92,054 கோடி துணை ராணுவ படைகளுக்கு ஒதுக்கப்பட்டு உள்ளது.
நாடு முழுவதும் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட இருக்கும் நிலையில், இதற்காக ரூ.4,278 கோடி ஒதுக்கப்பட்டு உள்ளது. இதைப்போல தேசிய பேரிடர் மீட்பு பணிகளுக்காக ரூ.1,126.62 கோடியும், சமூக பாதுகாப்பு மற்றும் வளர்ச்சி திட்டங்களுக்கு ரூ.842.45 கோடியும் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளன.
இந்த நிலையில் சிவில் விமான போக்குவரத்து துறைக்கு ரூ.3,797 கோடி ஒதுக்கப்பட்டு உள்ளதாக நிர்மலா சீதாராமன் அறிவித்தார். இது கடந்த ஆண்டை விட (ரூ.3,700 கோடி) 2.62 சதவீதம் அதிகம் ஆகும். ஜனாதிபதி, துணை ஜனாதிபதி, பிரதமர் ஆகியோர் பயணம் செய்வதற்காக 2 நவீன ரக (பி777) விமானங்கள் வாங்குவதற்காக ரூ.810 கோடி இந்த பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்டு உள்ளது.
கடன் சுமையில் உழலும் ஏர் இந்தியாவின் நிதி நிலைமையை மறுசீரமைப்புக்காக அமைக்கப்பட்டு உள்ள ஏர் இந்தியா அசட் ஹோல்டிங் லிட் நிறுவனத்துக்கு ரூ.2,205 கோடி ஒதுக்கப்பட்டு உள்ளது. மேலும் பிராந்திய இணைப்பை அதிகரிக்கும் உடான் திட்டத்துக்காக ரூ.465 கோடி ஒதுக்கப்பட்டு இருப்பதாக பட்ஜெட்டில் கூறப்பட்டு இருந்தது.

Related Tags :
Next Story