சூரிய கிரகணம் நிகழும் நேரத்தில் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவில் நடை வழக்கம்போல் திறந்திருக்கும்
சூரிய கிரகணம் நிகழும் நேரத்தில் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவில் நடை வழக்கம்போல் திறந்திருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஸ்ரீகாளஹஸ்தி,
ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தியில் உள்ள ஞானப்பிரசுனாம்பிகை சமேத ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரர் கோவில் உள்ளது. நாளை (வியாழக்கிழமை) காலை 8.08 மணியில் இருந்து பகல் 11.16 மணிவரை சூரிய கிரகணம் நிகழ்கிறது. இதையொட்டி கோவில் நடை திறந்திருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து கோவில் நிர்வாக அதிகாரி, வேதப்பண்டிதர்கள் கூறியதாவது:-
சூரிய கிரகணம் நிகழும் நேரத்தில் ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரரை தரிசனம் செய்தால் பக்தர்களுக்கு அனைத்துத் தோஷங்களும் நீங்கும். சூரிய கிரகணம் நிகழும் நேரத்தில் நாட்டில் உள்ள அனைத்துக் கோவில்களும் நடை சாத்தப்பட்டு இருக்கும்.
ஆனால், அதற்கு நேர்மாறாகச் சூரிய மற்றும் சந்திர கிரகணங்கள் நிகழும் நேரத்தில் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவில் வழக்கம்போல் நடை திறந்திருக்கும். பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள். இது தான் ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரர் கோவிலின் சிறப்பம்சமாகும். சூரிய கிரகணத்தால் நாளை கோவிலில் நடக்கும் அனைத்து ஆர்ஜித சேவைகளும் ரத்து செய்யப்படுகிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

Related Tags :
Next Story