ரிசாட்-2 பிஆர்1 செயற்கைகோளின் ஆண்டனா விரிவடையும் காட்சி -டுவிட்டரில் வெளியிட்டது இஸ்ரோ
ரிசாட்-2 பிஆர்1 செயற்கைகோளின் ரேடியல் ஆண்டனா விண்வெளியில் விரிவடையும் காட்சியை இஸ்ரோ டுவிட்டரில் வெளியிட்டுள்ளது.
ஸ்ரீஹரிகோட்டா,
இந்திய விண்வெளி ஆய்வு மையம் தயாரித்த பி.எஸ்.எல்.வி. சி-48 ராக்கெட் கடந்த 11 ஆம் தேதி மாலை 3.25 மணிக்கு ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஸ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து விண்ணில் ஏவப்பட்டு புவி சுற்றுவட்டப்பாதையில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டது.
இந்த ராக்கெட் மூலம் இந்தியாவுக்கு சொந்தமான பூமி கண்காணிப்பு செயற்கை கோளான ‘ரீசாட்-2பிஆர்1’ என்ற செயற்கை கோள் மற்றும் வணிக ரீதியிலான வெளிநாடுகளைச் சேர்ந்த 9 செயற்கை கோள்கள் விண்ணுக்கு அனுப்பப்பட்டுள்ளன.
628 கிலோ எடை கொண்ட ரிசாட் செயற்கைக்கோள் ரேடார் மூலம் புவிப்பரப்பை கண்காணித்துத் தகவல்களை அனுப்பும். வேளாண்மை, வனவளர்ப்பு, பேரிடர் மேலாண்மை ஆகியவற்றுக்குப் பயனுள்ள தகவல்களை இந்த செயற்கைக்கோள் மூலம் பெற முடியும். இதன் ஆயுட்காலம் 5 ஆண்டுகள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் ரிசாட்-2பிஆர்1 செயற்கை கோளின் ரேடியல் ஆண்டனா, புவிவட்டப்பாதையில் விரிவடையும் காட்சிகளை இஸ்ரோ வெளியிட்டுள்ளது. ஒரு நிமிடம் 37 விநாடிகள் அளவிலான இந்த வீடியோவை இஸ்ரோ டுவிட்டரில் வெளியிட்டுள்ளது.
#ISRO
— ISRO (@isro) 16 December 2019
Watch the successful deployment of Radial Rib Antenna of #RISAT2BR1 in orbit as observed by onboard camera. pic.twitter.com/7LoAB0jaVU
Related Tags :
Next Story