மத்தியபிரதேச முன்னாள் முதல்-மந்திரி கைலாஷ் ஜோஷி மரணம்: பிரதமர் மோடி இரங்கல்


மத்தியபிரதேச முன்னாள் முதல்-மந்திரி கைலாஷ் ஜோஷி மரணம்: பிரதமர் மோடி இரங்கல்
x
தினத்தந்தி 24 Nov 2019 10:20 AM (Updated: 24 Nov 2019 11:30 AM)
t-max-icont-min-icon

மத்தியபிரதேச மாநில முன்னாள் முதல்-மந்திரி கைலாஷ் ஜோஷி (வயது 90) உடல்நல குறைவால் காலமானார்.

போபால்,

மத்தியப்பிரதேச மாநில மக்களால் ‘அரசியல் முனிவர்’ என்று அழைக்கப்பட்ட கைலாஷ் சந்திரா ஜோஷி (90)  நுரையீரல் பாதிப்பு மற்றும் நீரிழிவு  நோய் காரணமாக  போபால் நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். 

இந்நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று காலை அவர் உயிரிழந்தார். அவரது இறுதிச்சடங்குகள் டேவாஸ் மாவட்டத்தில் உள்ள ஹட்பிப்பல்யா நகரில் நடைபெறும் என அவரது மகன் தீபக் ஜோஷி தெரிவித்துள்ளார்.

1977-78 காலகட்டத்தில் 6 மாத காலம் மத்திய பிரதேச முதல்-மந்திரியாக பதவி வகித்துள்ளார். பாஜகவை சேர்ந்த இவர் 1962 முதல் 1998 வரை பாக்லி சட்டமன்ற தொகுதி எம்.எல்.ஏ.வாக பதவி வகித்துள்ளார். 

பின்னர், 2000 முதல் 2004 வரை பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினராகவும் 2004 முதல் 2014 வரை போபால் தொகுதியின் மக்களவை உறுப்பினராகவும் இருந்துள்ளார்.

பாஜக மூத்த தலைவர்களுள் ஒருவரான கைலாஷ் ஜோஷி மறைவுக்கு பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

கைலாஷ் சந்திரா ஜோஷியின் மறைவுக்கு பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில்,

மத்தியப்பிரதேச மாநிலத்தின் வளர்ச்சிக்கு மிகப்பெரிய பங்களிப்பை அளித்தவர்களில் குறிப்பிடத்தக்கவரான கைலாஷ் சந்திரா ஜோஷியின் மறைவு செய்தியை கேட்டு வேதனை அடைந்துள்ளேன்.

ஜனசங்கம் மற்றும் பாஜகவை மத்திய இந்தியாவில் வளர்ப்பதற்கு அவர் அரும்பணி ஆற்றியுள்ளார். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு அதில் பதிவிட்டுள்ளார்.

Next Story