91 வயதிலும் அயராது உழைக்கும் விவசாயி


91 வயதிலும் அயராது உழைக்கும் விவசாயி
x
தினத்தந்தி 24 Oct 2019 8:34 AM IST (Updated: 24 Oct 2019 8:34 AM IST)
t-max-icont-min-icon

கர்நாடகாவில் கலபுரகி பகுதியை சேர்ந்த விவசாயி ஒருவர் தனது 91 வயதிலும் அயராமல் விவசாயத்தில் ஈடுபட்டு வருகிறார்.

பெங்களூரு,

நமது தேசத்தின் முதுகெலும்பாக இருக்கும் விவசாயம்  ஒரு முக்கியமான முதனிலைத் தொழில் ஆகும்.

இந்நிலையில் கர்நாடக மாநிலம் கலபுரகி பகுதியை சேர்ந்த பசவனப்பா பாட்டீல் என்ற விவசாயி 91 வயதிலும் தனது பண்ணையில் வேலை செய்து வருகிறார். இது தொடர்பாக அவர் கூறுகையில், 
 
நான் வயலில் காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை வேலை செய்கிறேன். நான் ரொட்டி, தயிர் சாப்பிடுகிறேன் மற்றும் பால் குடிக்கிறேன். அதனால் தான் எனக்கு ஒருபோதும் நோய்வாய்ப்படாது. எனக்கு 6 குழந்தைகள் உள்ளனர். ஆனால் அவர்களில் யாரும் விவசாயத்தில் ஈடுபடவில்லை என்று கூறினார்.

Next Story