கொல்கத்தா முன்னாள் போலீஸ் கமிஷனரை கைது செய்ய சி.பி.ஐ. தீவிரம் - தனிப்படை அமைத்தது


கொல்கத்தா முன்னாள் போலீஸ் கமிஷனரை கைது செய்ய சி.பி.ஐ. தீவிரம் - தனிப்படை அமைத்தது
x
தினத்தந்தி 19 Sept 2019 3:15 AM IST (Updated: 19 Sept 2019 2:58 AM IST)
t-max-icont-min-icon

கொல்கத்தா முன்னாள் போலீஸ் கமிஷனரை கைது செய்யவது தொடர்பாக சி.பி.ஐ. தனிப்படை அமைத்துள்ளது.

கொல்கத்தா,

சாரதா சிட்பண்ட் மோசடி வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு உடந்தையாகவும், ஆதாரங்களை அழித்ததாகவும் கொல்கத்தா போலீஸ் கமிஷனராக இருந்த ராஜீவ் குமார் மீது குற்றச்சாட்டு எழுந்தது. அதனால் அவரிடம் சி.பி.ஐ. விசாரிக்க சென்றபோது, மம்தா பானர்ஜி அரசு, சி.பி.ஐ.க்கு இடையூறு செய்தது. இந்த விவகாரம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது.

ராஜீவ் குமாரின் மனுவை ஏற்று, அவரை கைது செய்யக்கூடாது என்று கொல்கத்தா ஐகோர்ட்டு ஏற்கனவே உத்தரவு பிறப்பித்து இருந்தது. அந்த உத்தரவை கடந்த வெள்ளிக்கிழமை நீக்கியது. அதன்பிறகு, ராஜீவ் குமாருக்கு முன்ஜாமீன் பெற அவருடைய வக்கீல்கள் மேற்கொண்ட முயற்சி பலிக்கவில்லை.

இந்நிலையில், ராஜீவ் குமாரை கைது செய்வதில் சி.பி.ஐ. தீவிரமாக உள்ளது. அவர் கொல்கத்தாவில் உள்ள தனது அதிகாரபூர்வ இல்லத்தில்தான் இருப்பதாக சி.பி.ஐ. கருதுகிறது. எனவே, அவரை கைது செய்ய தனிப்படை அமைத்துள்ளது. மேலும், ஜாமீனில் விடமுடியாத கைது வாரண்டு பெறவும் சி.பி.ஐ. திட்டமிட்டுள்ளது.

Next Story