திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சாமி தரிசனம்


திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சாமி தரிசனம்
x

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சாமி தரிசனம் செய்தார்.

திருமலை,

திருப்பதி ஏழுமலையான் கோவிலில், தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் குடும்பத்தினர் நேற்று காலை 5.30 மணியில் இருந்து 6.30 மணிவரை வாரத்தில் ஒரு முறை நடக்கும் அஷ்டதல பாத பத்மாராதனை சேவையில் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர். அத்துடன் வகுளமாதாதேவி சன்னதி, விமான வெங்கடாசலபதி, யோகநரசிம்மர் சன்னதி, பாஷ்யங்கார் சன்னதி ஆகியவற்றில் தரிசனம் செய்தனர். பிரதான உண்டியலில் எடப்பாடி பழனிசாமி காணிக்கை செலுத்தினார்.

கோவிலில் உள்ள ரங்கநாயக்கர் மண்டபத்தில் அவர்களுக்கு லட்டு, தீர்த்தப்பிரசாதம், சாமி படம் ஆகியவற்றை தேவஸ்தான இணை அதிகாரி கே.எஸ்.சீனிவாசராஜு வழங்கினார். அவரை, பொன்னாடை போர்த்தி கவுரவித்தனர். வேத பண்டிதர்கள் வேத மந்திரங்களை ஓடி ஆசி வழங்கினர். பின்னர் கோவிலில் இருந்து வெளியே வந்ததும், பேடி ஆஞ்சநேயர் கோவிலில் தரிசனம் செய்தனர். அங்குள்ள அகிலாண்டத்தில் தேங்காய் உடைத்தும், கற்பூரம் ஏற்றியும் பிரார்த்தனை செய்தனர்.


Next Story