டெல்லியில் பா.ஜ.க. நாடாளுமன்ற குழு தலைவராக பிரதமர் மோடி தேர்வு


டெல்லியில் பா.ஜ.க. நாடாளுமன்ற குழு தலைவராக பிரதமர் மோடி தேர்வு
x
தினத்தந்தி 25 May 2019 6:27 PM IST (Updated: 25 May 2019 6:27 PM IST)
t-max-icont-min-icon

டெல்லியில் பா.ஜ.க. நாடாளுமன்ற குழு தலைவராக பிரதமர் மோடி தேர்வு செய்யப்பட்டு உள்ளார்.

புதுடெல்லி,

நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜனதா அதிக இடங்களை கைப்பற்றி தனி பெரும்பான்மை பெற்றுள்ளது. பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 350க்கும் அதிகமாக இடங்களை கைப்பற்றி இருக்கிறது.

இந்நிலையில் பிரதமர் தேர்வு, புதிய அரசு பொறுப்பேற்பு ஆகியவற்றுக்காக பா.ஜனதா எம்.பி.க்கள் மற்றும் கூட்டணி கட்சிகளின் எம்.பி.க்கள் கூட்டம் நாடாளுமன்ற வளாகத்தில் இன்று மாலை தொடங்கியது.  இந்த கூட்டத்தில் பங்கேற்க புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.பி.க்கள் நாடாளுமன்ற வளாகத்திற்கு வருகை தந்தனர்.  அக்கட்சியின் தேசிய தலைவர் அமித்ஷா, மூத்த தலைவர் எல்.கே. அத்வானி உள்ளிட்டோரும் வருகை தந்துள்ளனர்.

டெல்லியில் நடைபெறும் பா.ஜ.க. கூட்டணி கட்சி எம்.பி.க்கள் கூட்டத்தில் பா.ஜ.க. நாடாளுமன்ற குழு தலைவராக பிரதமர் மோடியின் பெயரை அமித்ஷா, ராஜ்நாத் சிங், நிதின் கட்கரி, தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி தலைவர்கள் உள்ளிட்டோர் முன்மொழிந்தனர்.  இதன்பின் அவர் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார்.  இதனை தொடர்ந்து மூத்த தலைவர்கள் அத்வானி, முரளி மனோகர் ஜோஷி காலில் விழுந்து மோடி ஆசி பெற்றார்.

இந்த கூட்டத்தில், தமிழக முதல் அமைச்சர் பழனிசாமி, பீகார் முதல் அமைச்சர் நிதிஷ் குமார், உத்தர பிரதேச முதல் அமைச்சர் யோகி ஆதித்யநாத், மத்திய மந்திரிகள் ஸ்மிருதி இராணி, சுஷ்மா ஸ்வராஜ், நிர்மலா சீதாராமன் உள்ளிட்டோரும் பங்கேற்றுள்ளனர்.  இதனை தொடர்ந்து தேசிய தலைவர் அமித்ஷா கூட்டத்தில் பேசி வருகிறார்.

Next Story