காங்கிரசுக்கு 18 மாநிலங்களிலும், பா.ஜனதாவுக்கு 10 மாநிலங்களிலும் பூஜ்ஜியம்


காங்கிரசுக்கு 18 மாநிலங்களிலும்,  பா.ஜனதாவுக்கு 10 மாநிலங்களிலும் பூஜ்ஜியம்
x
தினத்தந்தி 24 May 2019 8:25 PM IST (Updated: 24 May 2019 8:25 PM IST)
t-max-icont-min-icon

நாடாளுமன்ற தேர்தலில் 18 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் காங்கிரஸ் கட்சி ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை.


புதுடெல்லி, 

நாடாளுமன்றத்துக்கு 7 கட்டங்களாக நடந்த தேர்தலில் பாரதீய ஜனதா கட்சி கூட்டணி அமோக வெற்றி பெற்று, மத்தியில் ஆட்சியை தக்க வைத்துள்ளது. பா.ஜனதா மட்டும் 303 தொகுதிகளில் வெற்றியை தனதாக்கியது. பல வட மாநிலங்களில் அத்தனை தொகுதிகளையும் கைப்பற்றி 100 சதவீத வெற்றி பெற்றிருக்கிறது. காங்கிரஸ் கட்சி மீண்டும் பல்வேறு மாநிலங்களில் தோல்வியையே தழுவியுள்ளது.

ஆந்திரா, அருணாசலபிரதேசம், குஜராத், அரியானா, இமாசலபிரதேசம், காஷ்மீர், மணிப்பூர், மிசோரம், நாகாலாந்து, ராஜஸ்தான், சிக்கிம், திரிபுரா, உத்தரகாண்ட், டெல்லி, சண்டிகார், தாத்ரா நகர் ஹவேலி, டாமன்–டையு, லட்சத்தீவு ஆகிய 18 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் காங்கிரஸ் ஒரு இடத்தை கூட பெறவில்லை.

இதேபோன்று பா.ஜனதா 10 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறவில்லை. ஆந்திரா, தமிழ்நாடு, கேரளா, மேகாலயா, மிசோரம், சிக்கிம், அந்தமான், புதுச்சேரி, லட்சத்தீவு, தாத்ரா நகர் ஹவேலி ஆகிய 10 மாநிலங்களில் பா.ஜனதா வெற்றி பெறவில்லை. 

Next Story