ஜனாதிபதியை சந்தித்து ராஜினாமா கடிதத்தை வழங்கினார் மோடி: 30-ம்தேதி 2-வது முறையாக பிரதமராக பதவி ஏற்கிறார்


ஜனாதிபதியை சந்தித்து ராஜினாமா கடிதத்தை வழங்கினார் மோடி: 30-ம்தேதி 2-வது முறையாக பிரதமராக பதவி ஏற்கிறார்
x
தினத்தந்தி 24 May 2019 7:45 PM IST (Updated: 24 May 2019 7:45 PM IST)
t-max-icont-min-icon

டெல்லியில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை சந்தித்து முறைப்படி தனது ராஜினாமா கடிதத்தை பிரதமர் மோடி வழங்கினார்.

புதுடெல்லி,

மக்களவை தேர்தலில் 303 தொகுதிகளில் பாஜக வெற்றி பெற்றதாக அதிகாரப்பூர்வமாக அறிவிப்பை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.
தனிப்பெரும்பான்மைக்கு 272 இடங்கள் தேவையுள்ள நிலையில் பாஜக மட்டும் 303 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. 

மக்களவை தேர்தலில் காங்கிரஸ் கட்சி 52 இடங்களில் வெற்றி பெற்று 2-ம் இடத்தில் உள்ளது. 23 இடங்களில் வெற்றி பெற்று தேசிய அளவில் திமுக 3-வது இடத்தை பிடித்துள்ளது.

வரும் 30-ம் தேதி 2-வது முறையாக நாட்டின் பிரதமராக மீண்டும் மோடி பதவியேற்க உள்ளார்.  இந்நிலையில் இன்று மாலை மத்திய அமைச்சரவை கூட்டம் பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்றது. 

அதில் மத்திய மந்திரிகள் பங்கேற்றனர். உடல்நலக்குறைவு காரணமாக அருண் ஜெட்லி பங்கேற்கவில்லை.

இக்கூட்டத்தில் 16-வது மக்களவையை கலைப்பதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து புதிய அரசு அமைக்க வேண்டி பிரதமர் மோடி ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை டெல்லியில் உள்ள ராஷ்டிரபதி பவனில் சந்தித்தார். 

அப்போது மத்திய மந்திரிகள்  தனது ராஜினாமா கடித்தை வழங்கினார்கள். அதனை ஜனாதிபதி ஏற்றுக்கொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Next Story