டெல்லியில், நாளை தேசிய ஜனநாயக கூட்டணியின் ஆலோசனைக் கூட்டம்
டெல்லியில் நாளை தேசிய ஜனநாயக கூட்டணியின் ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது.
புதுடெல்லி,
மக்களவை தேர்தலில் பாரதீய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி மொத்தம் உள்ள 542 தொகுதிகளில் 349 இடங்களை கைப்பற்றி அமோக வெற்றி பெற்று வரலாற்று சாதனை படைத்தது. இதில் பாரதீய ஜனதா மட்டும் 302 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மை பெற்றது.
இந்தநிலையில், பாஜக கூட்டணி கட்சிகளின் எம்.பி-க்கள் குழு கூட்டம் நாளை மாலை 5 மணிக்கு நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெறுகிறது. புதிய அமைச்சரவை குறித்து விவாதிக்க கூட்டணி கட்சி தலைவர்களுக்கு பாஜக அழைப்பு விடுத்துள்ளது. அமைச்சரவையில் கூட்டணி கட்சியினருக்கு இடம் தருவது பற்றி ஆலோசனை நடத்தப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
Related Tags :
Next Story