பாஜக மூத்த தலைவர் அத்வானியுடன் பிரதமர் மோடி, அமித்ஷா சந்திப்பு
டெல்லியில் பாஜக மூத்த தலைவர் அத்வானியை சந்தித்து பிரதமர் மோடி, பாஜக தலைவர் அமித்ஷா ஆசி பெற்றனர்.
புதுடெல்லி,
மக்களவை தேர்தல் முடிவுகள் நேற்று வெளியாகின. இதில் 350 இடங்களில் வெற்றி பெற்ற தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியை தக்க வைத்துள்ளது. பிரதமர் நரேந்திர மோடி மீண்டும் ஆட்சி அமைக்க உள்ளார். வரும் 30-ஆம் தேதி மோடி மீண்டும் பிரதமராக பதவியேற்க இருப்பதாக பரவலாக தகவல்கள் கூறுகின்றன.
இந்த சூழலில், பாஜக மூத்த தலைவரான அத்வானியை பிரதமர் மோடியும் பாஜக தேசிய தலைவர் அமித்ஷாவும் சந்தித்து ஆசி பெற்றனர். இந்த சந்திப்புக்கு பிறகு பிரதமர் மோடி தனது டுவிட்டரில், “மதிப்புக்குரிய அத்வானியை சந்தித்தேன். அவரைப்போன்ற மாபெரும் தலைவர்களால்தான் பாரதீய ஜனதாவின் இன்றைய வெற்றி சாத்தியமானது. கட்சியை கட்டமைக்க பல தசாப்தங்கள் செலவிட்டதோடு, மக்களுக்கு புதிய சித்தாந்தங்களை விளக்கினார்” என்று தெரிவித்துள்ளார். அதேபோல், மற்றொரு மூத்த தலைவரான முரளி மனோகர் ஜோஷியையும் பிரதமர் மோடி சந்தித்து ஆசி பெற்றார்.
Dr. Murli Manohar Joshi is a scholar and intellectual par excellence. His contribution towards improving Indian education is remarkable. He has always worked to strengthen the BJP and mentor several Karyakartas, including me.
— Narendra Modi (@narendramodi) May 24, 2019
Met him this morning and sought his blessings. pic.twitter.com/gppfDt7KiB
Related Tags :
Next Story