ராகுல் காந்தி வயநாட்டில் சாதனை வெற்றி முழுவிவரம்
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, வயநாட்டில் சாதனை வெற்றி பெற்றார். ஆனால் அமேதி தொகுதியில் தோல்வியைத் தழுவினார்.
புதுடெல்லி,
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வழக்கமாக போட்டியிடும் உத்தரபிரதேச மாநிலத்தின் அமேதி தொகுதியுடன் கேரள மாநிலம் வயநாடு தொகுதியிலும் போட்டியிட்டார்.
அமேதி தொகுதியில் கடந்த நாடாளுமன்ற தேர்தலில், பாரதீய ஜனதா வேட்பாளர் ஸ்மிரிதி இரானியுடன் கடும் போட்டியை எதிர்கொண்டு குறைந்த வாக்கு வித்தியாசத்தில் ராகுல் காந்தி வெற்றி பெற்றார்.
இந்த தேர்தலில் மத்திய மந்திரி என்ற அந்தஸ்துடன் ஸ்மிரிதி இரானி போட்டியிட்டார். போட்டி மிகக்கடுமையாக இருக்கும் என எதிர்பார்த்துத்தான், ராகுல் காந்தி கேரள மாநிலம் வயநாட்டில் போட்டியிட்டதாக கருதப்பட்டது. அந்த தொகுதி மிகவும் பாதுகாப்பான தொகுதி என உணர்ந்தே களம் இறங்கினார். அது உண்மைதான் என்கிற வகையில் வயநாடு அவருக்கு அமோக வெற்றியை தந்துள்ளது.
கேரள மாநிலத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் ராகுல் காந்தி சாதனை வெற்றி பெற்றுள்ளார்.
ஓட்டு விவரம்
ராகுல் காந்தி (காங்கிரஸ்) 6,57,513
சுனீர் (இந்திய கம்யூ.) 2,54,821
துஷார் வெல்ல பள்ளி
(பாரததர்மஜன சேனா) 74,009
ராகுல் காந்தி இங்கு 4 லட்சத்து 2 ஆயிரத்து 692 ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
உத்தரபிரதேச மாநிலத்தின் அமேதி தொகுதி, காங்கிரசின் குடும்ப தொகுதியாக இருந்தது. இங்கு ராகுல் காந்தி, ஸ்மிரிதி இரானி இடையே நீயா, நானா என்கிற அளவுக்கு பலத்த போட்டி நிலவியது. இதில் ராகுல் காந்தியை வீழ்த்தி, ஸ்மிரிதி இரானி வெற்றி பெற்றார்.
Related Tags :
Next Story