தென்னிந்தியாவில் கர்நாடகம் தவிர்த்து தெலுங்கானாவில் பா.ஜனதா 4 தொகுதிகளில் முன்னிலை


தென்னிந்தியாவில் கர்நாடகம் தவிர்த்து தெலுங்கானாவில் பா.ஜனதா 4 தொகுதிகளில் முன்னிலை
x
தினத்தந்தி 23 May 2019 5:00 PM IST (Updated: 23 May 2019 5:00 PM IST)
t-max-icont-min-icon

தென்மாநிலங்களில் கர்நாடகம் தவிர்த்து தெலுங்கானாவில் பா.ஜனதா 4 தொகுதிகளில் முன்னிலைப் பெற்றுள்ளது.

தென் மாநிலங்களில் கர்நாடகம் மட்டுமே பா.ஜனதாவிற்கு சாதகமான மாநிலமாக இருந்து வருகிறது. கர்நாடகாவில் மொத்தம் உள்ள 28 தொகுதிகளில் பா.ஜனதா 24 தொகுதிகளில் முன்னிலைப் பெற்றுள்ளது. தமிழகத்தில் பா.ஜனதா, அதிமுக கூட்டணி 3 இடங்களில் முன்னிலைப் பெற்றுள்ளது. 

இதில் அடிக்கடி மாற்றம் இருந்து வருகிறது. ஆனால் பா.ஜனதா சார்பில் களமிறங்கிய 5 வேட்பாளர்களும் கடுமையான பின்னடைவை சந்தித்து வருகிறார்கள். மறுபுறம் கேரளாவில் பா.ஜனதாவிற்கு ஏமாற்றம் தான். சபரிமலை விவகாரம் கைகொடுக்கும் என நினைத்த பா.ஜனதாவிற்கு பெரும் ஏமாற்றம் ஏற்பட்டது. மாநிலத்தில் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி 19 இடங்களில் முன்னிலைப் பெற்றுள்ளது. இடதுசாரிகள் கூட்டணி 1 தொகுதியில் முன்னிலைப் பெற்றுள்ளது. ஆந்திராவில் பா.ஜனதாவிற்கு உறுப்பினர்கள் கிடைக்க வாய்ப்பு இல்லை.

மாநிலத்தில் 25 தொகுதியிலும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ்தான் முன்னிலைப் பெறுகிறது. இப்போது தெலுங்கானாவில் நிலை மாறியுள்ளது. தெலுங்கானாவில் பா.ஜனதா 4 தொகுதிகளில் முன்னிலைப் பெற்றுள்ளது. தென்னிந்தியாவில்  கர்நாடகம் தவிர்த்து தெலுங்கானாவில் பா.ஜனதா 4 தொகுதிகளில் முன்னிலைப் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. தெலுங்கானாவில் பா.ஜனதா தீவிரமாக பணியாற்றியதற்கு கிடைத்த பரிசாக பார்க்கப்படுகிறது.

Next Story