எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைத்த சந்திரபாபு நாயுடுவுக்கு ‘பூஜ்ஜியம்’


எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைத்த சந்திரபாபு நாயுடுவுக்கு ‘பூஜ்ஜியம்’
x
தினத்தந்தி 23 May 2019 4:37 PM IST (Updated: 23 May 2019 4:37 PM IST)
t-max-icont-min-icon

எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைத்த சந்திரபாபு நாயுடு ஆந்திராவில் படுதோல்வியை நோக்கி செல்கிறார்.

மத்தியில் மோடி தலைமையிலான பா.ஜனதா அரசை அகற்றுவதற்கு எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்கும் பணியை தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடு மேற்கொண்டார். ஆந்திராவில் நாடாளுமன்றத் தேர்தலுடன், சட்டசபைத் தேர்தலும் நடந்தது. இரு தேர்தலிலும் சந்திரபாபு நாயுடுவுக்கு மரண அடி கொடுக்கப்பட்டுள்ளது. மாநிலத்தில் மொத்தம் உள்ள 25 தொகுதிகளியிலும் ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் முன்னிலைப் பெற்றுள்ளது. கடந்த தேர்தலில் 16 இடங்களில் வென்ற தெலுங்குதேசம் ஒரு தொகுதியில் கூட முன்னிலைப் பெறவில்லை.

மாநிலத்திலும் ஆட்சியை இழக்கிறது. மொத்தம் உள்ள தொகுதிகள் 175 ஆகும். இதில் ஆட்சியமைக்க பெரும்பான்மை 88 தொகுதிகளின் வெற்றியாகும். ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியே 144 இடங்களில் முன்னிலைப் பெற்றுள்ளது. சந்திரபாபு நாயுடு கட்சி 30 தொகுதிகளில் முன்னிலைப் பெற்றுள்ளது. எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைப்பதாக நாடுமுழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்ட சந்திரபாபு நாயுடுவுக்கு ஒரு எம்.பி.யாவது கிடைக்குமா? என்பதே பெரும் கேள்விக்குறியாக உள்ளது.

விரைவில் சந்திரபாபு நாயுடு ராஜினாமாவை ஆளுநரிடம் வழங்க உள்ளார். 

Next Story