காங்கிரஸ் ஆளும் மாநிலங்களிலும் வலிமை காட்டிய பா.ஜ.க.
காங்கிரஸ் ஆளும் மாநிலங்களிலும் வெற்றி பெற்று தனது வலிமையை பா.ஜ.க. காட்டியுள்ளது.
புதுடெல்லி,
மக்களவைத் தேர்தலுக்கு கடந்த ஏப்ரல் 11- ஆம் தேதி தொடங்கி கடந்த 19- ஆம் தேதி வரை ஏழு கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. மொத்தம் உள்ள 543 தொகுதிகளில் வேலூர் தொகுதி தவிர 542 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடந்தது. இதில் 67.11 சதவிகிதம் வாக்குகள் பதிவாகியுள்ளன. வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது. இதில் மொத்தமுள்ள 542 தொகுதிகளில் பாஜக 350-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. காங்கிரஸ் 110 தொகுதிகளிலும் இதர கட்சிகள் 111 தொகுதிகளிலும் முன்னிலையில் உள்ளன.
இதன் மூலம் 2019-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் பாஜக தலைமையிலான கூட்டணி ஆட்சி பெரும்பான்மையோடு மீண்டும் ஆட்சியமைப்பது உறுதியாகியுள்ளது.
நாட்டில் மொத்தம் உள்ள 543 தொகுதிகளில் 273 பாராளுமன்ற தொகுதிகள் உத்தரபிரதேசம், பீகார், குஜராத், ஆந்திரா, மத்திய பிரதேசம், ராஜஸ்தான், மகாராஷ்டிரா ஆகிய 7 மாநிலங்களில் அடங்கும். இது மொத்தம் உள்ள தொகுதிகளில் 36 சதவீதமாகும். பாரதீய ஜனதா கூட்டணி கடந்த தேர்தலில் அதிக எண்ணிக்கையில் பாராளுமன்ற தொகுதிகளை இந்த மாநிலங்களில் தான் கைப்பற்றியது.
இந்தி பேசும் மாநிலங்களில் இமாசல பிரதேசம், அரியானா, ராஜஸ்தான், உத்தரகாண்ட், டெல்லி, மத்திய பிரதேசம், சத்தீஸ்கார், பீகார், ஜார்கண்ட், உத்தர பிரதேசம் மற்றும் சண்டிகர் யூனியன் பிரதேசங்கள் ஆகிய 10 மாநிலங்கள் மிகவும் முக்கியமானவை.
ஒடிசா, அரியானா, உத்தரப்பிரதேசம், ராஜஸ்தான், கர்நாடகா உள்ளிட்ட பல மாநிலங்களில் பாஜக தொடர்ந்து முன்னிலையில் உள்ளது. டெல்லியில் பாஜக 7 தொகுதிகளிலும் முன்னிலையில் உள்ளது.
பாரதீய ஜனதா முன்னணி நிலவரம் வருமாறு:-
உத்தரபிரதேசம்- 60
மத்திய பிரதேசம் -28
பீகார்-38
ராஜஸ்தான்-25
மகாராஷ்டிரா-40
அரியானா-10
ஜார்கண்ட் -13
சத்தீஸ்கார்-10
டெல்லி-7
குஜராத் -26
இமாசலபிரதேசம் -4
கர்நாடகா-23
உத்தரகாண்ட் -5
பஞ்சாப் மாநிலம் குர்தாஸ்பூர் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்ட நடிகர் சன்னிதியோல் முன்னிலை பெற்றுள்ளார். அவரை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் சுனில் குமார் ஜக்கார் பின்னடைவு பெற்றுள்ளார். அமேதி தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் ராகுல் காந்தியை விட குறைந்த வாக்கு வித்தியாசத்தில் முன்னிலை பெற்றுள்ளார் ஸ்மிருதி இரானி. கிழக்கு டெல்லி தொகுதியில் போட்டியிட்ட முன்னாள் கிரிக்கெட் வீரர் கவுதம் காம்பீர் ஆம் ஆத்மி வேட்பாளர் அதிஷியை விட முன்னிலை பெற்றுள்ளார்.
லோக்சபா தேர்தல் முடிவுகளில் பெரும்பாலான மாநிலங்களில் பா.ஜ.க முன்னிலையில் உள்ளன.
இருப்பினும் சில மாநிலங்களில் காங்கிரஸ் கூட்டணி முன்னிலையில் இருந்து வருகிறது. தமிழகம், கேரளா, லட்சத்தீவு, மேகாலயா, புதுச்சேரி, பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் காங்., கூட்டணி முன்னிலையில் இருந்து வருகிறது.
இது தவிர ஆந்திராவில் ஒய்எஸ்ஆர். காங்கிரஸ் கட்சியும், ஒடிசாவில் பிஜூ ஜனதா தளம் கட்சியும், தெலுங்கானாவில் தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சியும் முன்னிலையில் உள்ளன.
ஒடிசா மாநிலத்தில் மொத்தம் உள்ள 21 தொகுதிகளில் பாரதீயஜனதா 12 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. பிஜூ ஜனதாதளம் 6 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. மகாராஷ்ட்ராவில் மொத்தமுள்ள 48 தொகுதிகளில் பா.ஜ.க. கூட்டணி முன்னிலை பெற்று உள்ளது. பாஜக - 40 காங் - 07 மற்றவை - 01 ஆகும்.
* வாரணாசி தொகுதியில் பிரதமர் மோடி 1 லட்சத்து 20 ஆயிரம் வாக்குகள் முன்னிலை பெற்று உள்ளார்.
* ராஜஸ்தானில் பா.ஜ.க. முன்னிலை.
* மேற்கு வங்காளத்தில் திரிணாமுல் காங்கிரஸ் 24 இடங்களிலும், பாரதீயஜனதா 17 இடங்களிலும், காங்கிரஸ் 1 இடத்திலும் முன்னணியில் உள்ளது.
* கேரள மாநிலத்தில் காங்கிரஸ் கூட்டணி - 19 எல்டிஎப் - 01 பா.ஜ.க - 0.
Related Tags :
Next Story