அமேதி தொகுதியில் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி தொடர் பின்னடைவு
அமேதி தொகுதியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தொடர் பின்னடைவை சந்தித்து வருகிறார்.
காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள தனது சொந்தத் தொகுதியான அமேதியில் மீண்டும் போட்டியிடுகிறார். மாநிலத்தில் பகுஜன் சமாஜ் - சமாஜ்வாதி ஆகிய கட்சிகள் கூட்டணி அமைத்துப் போட்டியிட்டாலும் காங்கிரஸ் கட்சியை அந்தக் கூட்டணியில் சேர்த்துக் கொள்ளவில்லை. எனினும், ராகுல் காந்தியின் அமேதி தொகுதியிலும், காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி போட்டியிடும் ரேபரேலி தொகுதியிலும் வேட்பாளர்களை நிறுத்தவில்லை.
அமேதி தொகுதியில் ராகுல் காந்தியை எதிர்த்து பா.ஜனதா சார்பில் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி போட்டியிடுகிறார். ராகுல் காந்தி கேரள மாநிலம் வயநாடு தொகுதியிலும் போட்டியிடுகிறார். ஸ்மிருதி இரானி அமேதியை குறிவைத்து தீவிர பிரசாரம் மேற்கொண்டார். அங்கு இருவருக்கும் இடையே கடுமையான போட்டி இருக்கும் என பார்க்கப்பட்டது. அதுபோன்றே இருக்கிறது. காங்கிரசின் பாரம்பரியமான தொகுதியில் ராகுல் காந்தி பின்னடைவை சந்தித்து வருகிறார்.
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஸ்மிருதி இரானியைவிட 14,500 வாக்குகள் பின் தங்கியுள்ளார். ஸ்மிருதி இரானி 1,38,160 வாக்குகளையும், ராகுல் காந்தி 1,23,602 வாக்குகளையும் பெற்றுள்ளனர்.
Related Tags :
Next Story