ஜம்மு காஷ்மீரில் தேசிய மாநாட்டு கட்சி 3 இடங்களில் முன்னிலை, பாஜக 2 இடங்களில் முன்னிலை


ஜம்மு காஷ்மீரில் தேசிய மாநாட்டு கட்சி 3 இடங்களில் முன்னிலை, பாஜக 2 இடங்களில் முன்னிலை
x
தினத்தந்தி 23 May 2019 12:38 PM IST (Updated: 23 May 2019 12:38 PM IST)
t-max-icont-min-icon

ஜம்மு காஷ்மீரில் தேசிய மாநாட்டு கட்சி 3 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. பாஜக 2 இடங்களில் முன்னிலை வகிக்கிறது.

ஜம்மு,

17-வது பாராளுமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. முதற்கட்ட சுற்றுகளின் முடிவு அடிப்படையில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 343 இடங்களில் முன்னிலை வகிக்கிறது.

ஜம்மு காஷ்மீரை பொறுத்தவரை, தேசிய மாநாட்டு கட்சி 3 தொகுதிகளில்  முன்னிலை பெற்றுள்ளது. அக்கட்சியின் தலைவர் பரூக் அப்துல்லா ஸ்ரீநகர் தொகுதியில் முன்னிலை வகிக்கிறார். பாரமுல்லா, அனந்தநாக் ஆகிய தொகுதிகளிலும் தேசிய மாநாட்டு கட்சி முன்னிலை வகிக்கிறது. உதாம்பூர் மற்றும் ஜம்மு ஆகிய இடங்களில் பாஜக முன்னிலை வகிக்கிறது.

Next Story