கர்நாடகாவில் 23 இடங்களில் பாஜக முன்னிலை


கர்நாடகாவில் 23 இடங்களில் பாஜக முன்னிலை
x
தினத்தந்தி 23 May 2019 12:26 PM IST (Updated: 23 May 2019 12:26 PM IST)
t-max-icont-min-icon

நாடாளுமன்ற தேர்தலில் கர்நாடகாவில் 23 இடங்களில் பாஜக முன்னிலை வகிக்கிறது.

பெங்களூரு,

மக்களவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகின்றது.  கர்நாடகாவில் உள்ள 28 மக்களவை தொகுதிகளில் 23 இடங்களில் பாஜக முன்னிலை வகிக்கிறது. காங்கிரஸ் - ஜேடிஎஸ் கூட்டணி 4 இடங்களில் மட்டுமே முன்னிலை பெற்றுள்ளது. 1 இடத்தில் சுயேட்சை வேட்பாளர் முன்னிலை பெற்றுள்ளார்.

தேவேகவுடா பேரன் பிரஜ்வால் ரேவன்னா ஹசன் தொகுதியில் முன்னிலை வகிக்கிறார். மற்ற குடும்ப உறுப்பினர்கள் தேவேகவுடா உட்பட பின்னிலையில் உள்ளனர். முன்னாள் முதல்வர் எடியூரப்பா மகன் பி.ஒய்.ராகவேந்திரா 1 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை வகிக்கிறார்.

முதல்வர் குமாரசாமியின் மதசார்பற்ற ஜனதா தளம் 2 தொகுதிகளிலும் முன்னிலையில் உள்ளது. மாண்டியா தொகுதியில் திரைப்பட நடிகையும்  மறைந்த நடிகர் அம்பரீஷின் மனைவியுமான சுமலதா முன்னணியில் உள்ளார். காங்கிரஸ் மூத்த தலைவர் வீரப்ப மொய்லி, கே.எச்.முனியப்பா பின்னடைவை சந்தித்துள்ளனர். பெங்களூரு மத்திய தொகுதியில் சுயேட்சை வேட்பாளாராக போட்டியிட்ட பிரகாஷ் ராஜ் பின்னடைவை சந்தித்துள்ளார்.

Next Story