நாடாளுமன்ற தேர்தல்; ரேபரேலி தொகுதியில் சோனியா காந்தி முன்னிலை


நாடாளுமன்ற தேர்தல்; ரேபரேலி தொகுதியில் சோனியா காந்தி முன்னிலை
x
தினத்தந்தி 23 May 2019 10:20 AM IST (Updated: 23 May 2019 10:20 AM IST)
t-max-icont-min-icon

நாடாளுமன்ற தேர்தலில் ரேபரேலி தொகுதியில் சோனியா காந்தி முன்னிலை வகிக்கிறார்.

நாடாளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடந்து முடிந்துள்ளது.  உத்தர பிரதேசத்தில் 80 தொகுதிகளுக்கு 7 கட்டங்களிலும் தேர்தல் நடத்தப்பட்டது.  இந்த தேர்தலில் பா.ஜ.க. கூட்டணி 59 இடங்களிலும், பகுஜன் சமாஜ் மற்றும் சமாஜ்வாதி கூட்டணி 17 இடங்களிலும், காங்கிரஸ் கூட்டணி 2 இடங்களிலும் முன்னிலை வகிக்கின்றது.

இதில் உத்தர பிரதேசத்தின் ரேபரேலி தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி முன்னிலை வகிக்கிறார்.

இதேபோன்று பா.ஜ.க. நட்சத்திர வேட்பாளர்களான ஸ்மிரிதி இரானி (அமேதி), மேனகா காந்தி (சுல்தான்பூர்), ஹேமா மாலினி (மதுரா), ஜெயபிரதா (ராம்பூர்), சாக்ஷி மகாராஜ் (உன்னாவ்), வருண் காந்தி (பிலிபித்), ராஜ்நாத் சிங் (லக்னோ) ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர்.

இந்த கூட்டணிக்கு எதிராக போட்டியிட்ட சமாஜ்வாதி கட்சியின் நட்சத்திர வேட்பாளர்களான அகிலேஷ் யாதவ் (அசம்கார்), டிம்பிள் யாதவ் (கன்னோஜ்), முலாயம் சிங் யாதவ் (மெயின்புரி) ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர்.

Next Story