‘போலி கருத்துக்கணிப்புகளால் கலங்க தேவை இல்லை’ - கட்சித் தொண்டர்களுக்கு ராகுல் வேண்டுகோள்
போலி கருத்துக்கணிப்புகளால் கலங்கத்தேவை இல்லை என்று கட்சித்தொண்டர்களுக்கு ராகுல் காந்தி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
புதுடெல்லி,
நாடாளுமன்ற தேர்தல்கள் முடிந்து கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளிவந்துள்ளன. அவை, மத்தியில் ஆளும் பாரதீய ஜனதா கூட்டணிக்கு சாதகமாக அமைந்துள்ளன.
கருத்துக்கணிப்புகள் முடிவு வெளியான நிலையில் டெல்லியில் காங்கிரஸ் கட்சியின் தலைமையகம், தொண்டர்கள் இன்றி வெறிச்சோடிக் காணப்பட்டதாக தகவல்கள் வெளியாகின.
கருத்துக்கணிப்பு முடிவுகள் பற்றி காங்கிரஸ் கட்சித்தலைவர் ராகுல் காந்தி வெளிப்படையாக கருத்து தெரிவிக்காமல் மவுனம் காத்து வந்தார்.
இந்த நிலையில் அவர் தனது மவுனத்தை கலைத்துக்கொண்டு, கட்சித் தொண்டர்களுக்கு வேண்டுகோள் விடுத்து டுவிட்டரில் நேற்று இந்தியில் பதிவு வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறி இருப்பதாவது:-
அடுத்த 24 மணி நேரம் மிக முக்கியமானது. எச்சரிக்கை உணர்வுடனும், விழிப்புணர்வுடனும் இருங்கள். பயப்படாதீர்கள். நீங்கள் உண்மைக்காகத்தான் போராடிக்கொண்டிருக்கிறீர் கள். போலியான, தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகளால் கலங்கத் தேவை இல்லை. உங்களை நீங்கள் நம்புங்கள். காங்கிரசை நம்புங்கள். உங்கள் கடின உழைப்பு வீணாய் போய்விடாது. இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
இதேபோன்று காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி, கடந்த திங்கட்கிழமை காங்கிரஸ் கட்சித்தொண்டர்களுக்கு ஊக்கம் அளிக்கும் வகையில் ஆடியோ செய்தி ஒன்றை வெளியிட்டது நினைவுகூரத்தக்கது.
அதில் அவர், “வதந்திகளாலும், கருத்துக்கணிப்பு முடிவுகளாலும் தொண்டர்கள் கலங்க தேவை இல்லை. அவை காங்கிரஸ் தொண்டர்களின் ஊக்கத்தை பலவீனப்படுத்த வெளியானவை. நமது கடின உழைப்பு அதற்கான பலனைத் தராமல் போகாது” என குறிப்பிட்டிருந்தார்.

Related Tags :
Next Story