வாக்கு எண்ணிக்கை மையங்களில் வன்முறையை தவிர்க்க மத்திய உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தல்


வாக்கு எண்ணிக்கை மையங்களில் வன்முறையை தவிர்க்க மத்திய  உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தல்
x
தினத்தந்தி 22 May 2019 6:13 PM IST (Updated: 22 May 2019 6:13 PM IST)
t-max-icont-min-icon

வாக்கு எண்ணிக்கை மையங்களில் வன்முறை நிகழாத வண்ணம் கவனம் செலுத்த வேண்டும் என மத்திய உள்துறை அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

புதுடெல்லி,

நாடாளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடந்து முடிந்தது.  இறுதி கட்ட தேர்தல் கடந்த 19ந்தேதி நடந்தது.  இதன்பின் வன்முறை எதுவும் இன்றி தேர்தல் அமைதியாக நடந்துள்ளது என தேர்தல் ஆணையம் அறிவித்தது.  வாக்கு எண்ணிக்கை நாளை நடைபெறுகிறது.  இதனை முன்னிட்டு சட்டம் மற்றும் ஒழுங்கு பிரச்சனை ஏற்படாமல் தடுக்க மாநில அரசுகளுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.

வாக்கு எண்ணும் மையங்களுக்கு கூடுதல் பாதுகாப்பு இருப்பது அவசியம் என்று மாநில தலைமை செயலாளர், டி.ஜி.பி.க்களுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவு பிறப்பித்து உள்ளது.  வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நிலையில் சட்டம் மற்றும் ஒழுங்கை பாதுகாக்குமாறு அறிவுறுத்தப்பட்டு உள்ளது.  வாக்கு எண்ணிக்கை மையங்களில் வன்முறை நிகழாத வண்ணம் கவனம் செலுத்த வேண்டும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

Next Story