தேர்தல் முடிவுகளை அறிவிப்பதில் கால தாமதமாகும் -தேர்தல் ஆணையம்
மக்களவைத் தேர்தல் முடிவுகளை அறிவிப்பதில் 5 மணி முதல் 6 மணி நேரம் வரை தாமதம் ஏற்படும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
புதுடெல்லி,
ஏப்ரல் 18-ம் தேதி துவங்கிய மக்களவை தேர்தல், 7 கட்டங்களாக நடத்தப்பட்டு மே 19-ம் தேதி நிறைவடைந்தது. மக்களவை தேர்தல் 4 மாநில சட்டசபை தேர்தல், தமிழகத்தில் 22 தொகுதிகள் மற்றும் புதுச்சேரியில் ஒரு தொகுதி இடைத்தேர்தலில் பதிவான ஓட்டுக்கள் நாளை (மே 23) எண்ணப்பட உள்ளன.
இந்நிலையில், தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள தகவலின் படி,
விவிபேட் ஒப்புகைச்சீட்டுகளை வாக்கு இயந்திரங்களில் பதிவான வாக்குடன் சரிபார்க்க அவகாசம் தேவைப்படுகிறது. ஒரு சட்டமன்ற தொகுதிக்கு 5 விவிபேட் இயந்திரங்களின் ஒப்புகைச்சீட்டுகள் சரிபார்க்கப்படுகின்றன.
இதனால் மக்களவை தேர்தல் முடிவை அறிவிப்பதில் 5 மணி முதல் 6 மணி நேரம் வரை கால தாமதம் ஏற்படும். தபால் ஓட்டுகளை எண்ணி முடிப்பதற்கும் கூடுதல் அவகாசம் தேவைப்படுவதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.
Related Tags :
Next Story