பிரதமர் மோடியிடம் தேர்தல் கமிஷன் சரணாகதி அடைந்து விட்டது - ராகுல் காந்தி குற்றச்சாட்டு
பிரதமர் மோடியிடம் தேர்தல் கமிஷன் சரணாகதி அடைந்து விட்டது என்று ராகுல் காந்தி குற்றம் சாட்டினார்.
புதுடெல்லி,
தேர்தல் கமிஷன் பாரபட்சமாக நடந்து வருவதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வந்தன. இதற்கிடையே, பிரதமர் மோடி தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருக்கும்போதே கேதார்நாத் சென்றதையும், அதற்கு டெலிவிஷன் சேனல்கள் அளித்த முக்கியத்துவத்தையும் சுட்டிக்காட்டி எதிர்க்கட்சிகள் மீண்டும் தேர்தல் கமிஷனை விமர்சித்துள்ளன.
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
தேர்தல் பத்திரங்கள், மின்னணு எந்திர வாக்குப்பதிவை அமல்படுத்தியதில் இருந்து தேர்தல் தேதியை நிர்ணயித்தது, நமோ டி.வி.யை அனுமதித்தது, மோடியின் ராணுவம் என்ற பேச்சை ஏற்றுக்கொண்டது, இப்போது, கேதார்நாத்தில் நடந்த நாடகம் வரை தேர்தல் கமிஷன், மோடி மற்றும் அவரது குழு முன்பு சரண் அடைந்து விட்டது எல்லா இந்தியர்களுக்கும் தெளிவாக தெரிந்து விட்டது.
தேர்தல் கமிஷன், அச்சத்துடனும், மரியாதையுடனும் பார்க்கக்கூடியதாக முன்பு இருந்தது. இனிமேல் அப்படி இருக்காது. இவ்வாறு ராகுல் காந்தி கூறியுள்ளார்.
இதுபோல், முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரமும் தேர்தல் கமிஷனை விமர்சித்துள்ளார். அவர் கூறியதாவது:-
தேர்தல் முடிந்து விட்டது. கடந்த 2 நாட்கள் மோடி மேற்கொண்ட புனித பயணத்தில், மதமும், மத அடையாளங்களும் வாக்காளர்களை கவருவதற்காக ஏற்க முடியாத வகையில் பயன்படுத்தப்பட்டுள்ளது.
தேர்தல் கமிஷன் தூங்கிக்கொண்டிருந்தது என்பதுதான் நமது குற்றச்சாட்டாக இருந்தது. இப்போது, நாம் ஒருபடி மேலே சென்று, தனது சுதந்திரத்தையும், அதிகாரத்தையும் தேர்தல் கமிஷன் முற்றிலும் விட்டுக்கொடுத்துவிட்டது என்று கூறலாம். வெட்கக்கேடு. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related Tags :
Next Story